ஒலிம்பியக் கடவுளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒலிம்பியக் கடவுளர் அல்லது பன்னிரு ஒலிம்பியர் (Twelve Olympians) எனப்படுவோர் கிரேக்கத் தொன்மவியலில் மிகவும் சிறப்பாகக் கருதப்படும், ஒலிம்பசு மலையின் உச்சியில் வாழ்ந்த பன்னிரண்டு கடவுளர் ஆவர். பதினேழு கடவுள்கள் ஒலிம்பியக் கடவுளராக பல்வேறு சமயங்களில் இருந்தபோதிலும் எந்நேரத்திலும் ஒரே சமயத்தில் பன்னிருவருக்குக் கூடுதலாக இருந்ததில்லை.

சியுசு, ஈரா, பொசைடன், ஏரிஸ், ஹெர்மீஸ், ஹெப்பஸ்தஸ், அப்ரடைட்டி, அத்தீனா, அப்போலோ, மற்றும் ஆர்ட்டெமிஸ் ஆகியோர் எப்போதுமே ஒலிம்பியக் கடவுளராகக் கருதப்பட்டவர்கள். ஹெபே, ஹீலியோசு, ஹெஸ்டியா, டெமட்டர், டியானிசூசு, ஹடேசு, மற்றும் பெர்சஃபோன் ஆகிய கடவுள்கள் சில நேரங்களில் ஒலிம்பியர்களாக இருந்தவர்கள். ஹெஸ்டியா மனிதர்களில் ஒருத்தியாக வாழ விரும்பி டியானிசிற்காக தனது இடத்தை விட்டுக் கொடுத்தவள்.

சியுசும் அவனது உடன்பிறப்புக்களும் டைட்டன்களுடன் நிகழ்த்திய போரில் வெற்றி கண்ட பிறகு ஒலிம்பியக் கடவுளரின் முக்கியத்துவம் கூடுதலாயிற்று. சியுசு, ஈரா, பொசைடன், டெமட்டர், ஹெஸ்டியா, மற்றும் ஹடேசு உடன்பிறப்புக்களாவர். மற்ற கடவுள்கள் சியுசிற்கு பல்வேறு மனைவிகள் மூலமாகப் பிறந்தவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பியக்_கடவுளர்&oldid=2056901" இருந்து மீள்விக்கப்பட்டது