ஒலிம்பிக் தேசிய பூங்கா
ஒலிம்பிக் தேசிய பூங்கா | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |||||||||||
![]() | |||||||||||
அமைவிடம் | ஜெஃபெர்சன் கவுண்டி, வாஷிங்டன், கிளாலாம் கவுண்டி, வாஷிங்டன், மேசன் கவுண்டி, வாஷிங்டன், மற்றும் கிரேஸ் ஆர்பர் கவுண்டி, வாஷிங்டன், வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்க நாடுகள் | ||||||||||
அருகாமை நகரம் | போர்ட் ஏஞ்சல்ஸ் | ||||||||||
பரப்பளவு | 922,650 ஏக்கர்கள் (3,733.8 km2) | ||||||||||
நிறுவப்பட்டது | சூன் 29, 1938 | ||||||||||
வருகையாளர்கள் | 3,401,996 (in 2017)[1] | ||||||||||
நிருவாக அமைப்பு | தேசிய பூங்கா சேவை | ||||||||||
வலைத்தளம் | Olympic National Park | ||||||||||
|
ஒலிம்பிக் தேசிய பூங்கா (Olympic National Park) ஒலிம்பிக் மூவலந்தீவில் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்க மாநிலத்தில் அமைந்துள்ளது.[2] இந்தப் பூங்கா நான்கு அடிப்படைப் பகுதிகளைக் கொண்டுள்ளது: அமைதிப் பெருங்கடல் கடற்கரை, ஆல்பைன் பகுதிகள், மேற்குப்புற மித வெப்ப மண்டல மழைக்காடுகள் மற்றும் வறண்ட கிழக்குப் பகுதியில் காணப்படும் காடுகள்[3] ஆகியவையாகும். இந்தப் பூங்காவின் பரப்பிற்குள்ளேயே மூன்று வேறுபட்ட சூழல் மண்டலங்கள் காணப்படுகின்றன. அதாவது உப ஆல்பைன் காடுகள் மற்றும் காட்டுப்பூ சமவெளி, மித வெப்பமண்டலக் காடுகள், மற்றும் வறண்ட பசிபிக் கடற்கரை ஆகியவையாகும். இந்த மூன்று வெவ்வேறு சூழல் மண்டலங்களும் மாசற்ற, தூய்மையான சூழலையும், ஈடில்லா காட்சியழகையும் கோண்டுள்ளது.[4] அமெரிக்க குடியரசுத் தலைவர் தியொடார் ரூசவெல்ட் 1909 ஆம் ஆண்டு, மார்ச் 2 ஆம் நாளில் மவுண்ட் ஒலிம்பஸ் தேசிய நினைவுச்சின்னத்தை உருவாக்கினார்.[5][6]1938 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி அமெரிக்க குடியரசுத் தலைவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் இந்தப் பூங்காவை தேசியப் பூங்காவாக அறிவித்தார். இந்தப் பூங்காவானது, 1976 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவால் சர்வதேச உயிர்க்கோளக் காப்பகமாகவும், 1981 இல் உலக பாரம்பரியக் களமாகவும் அறிவிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் காங்கிரசால் இந்த வனப்பகுதியின் 95 விழுக்காடு பகுதியானது, அடர்ந்த வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.[7][8]
பூங்காவின் கரையோரப் பகுதியானது ஒரு கரடுமுரடான, மணற்பாங்கான கடற்கரையுடன், அருகிலுள்ள காடுகளின் பகுதியைக் கொண்டுள்ளது. இப்பகுதியானது 60 மைல்கள் (97 கி.மீ) நீளத்தையும் சில மைல்கள் அகலத்தையும் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள இரண்டு ஆறுகளின் முகத்துவாரப் பகுதியில் உள்ளூர் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஓஹ் ஆற்றுப்பகுதியில் வாழும் ஓஹ் இன மக்கள் லா புஷ் என்ற நகரிலும் குயிலுயுட் ஆற்றின் முகத்துவாரத்தில் வாழும் மக்கள் குயிலுயுட் பகுதியிலும் வசிக்கின்றனர்.[9]
கடற்கரையானது 10 மைல்கள் (16 கி.மீ ) முதல் 20 மைல்கள் (32 கி.மீ ) வரையிலான நீளமுள்ள, பிளவுபடாமல் காணப்படும் அடர் வனப்பகுதிகளைக் கொண்டுள்ளன. சில கடற்கரைகப் பகுதிகள் முதன்மையாக மணலை மட்டுமே கொண்டிருக்கும் போது, மற்ற சில பகுதிகள் அதிக கனமான பாறைகள் மற்றும் மிகப்பெரிய கூழாங்கற்களைக் கொண்டவையாகவும் உள்ளன. அடர்ந்து வளர்ந்த புதர்கள், வழுக்கும் நிலை, அலைகள் மற்றும் மிதமான மழைக்காடுகளின் காலநிலை ஆகியவை நடைப்பயணத்தைத் தடுப்பவையாக உள்ளன. கடற்கரைப் பகுதியானது ஒலிம்பிக்கின் உட்புறத்தை விட மிகவும் எளிதில் அணுகக்கூடியது; கடினமான நிலப்பரப்பு காரணமாக, வெகு சில முதுகில் பை சுமந்து செல்லும் துணிகரச் செயலில் ஈடுபடுவோர் மட்டுமே, சாதாரணமாக ஒரு நாளில் கடந்து செல்லும் தூரத்தைக் கடந்து பயணிக்கின்றனர். இந்தக் கடலோரப் பகுதியின் மிகவும் பிரபலமான ஓர் இடம் 9 மைல் (14 கிமீ) நீளமுள்ள ஓசெட் லூப் ஆகும். இந்த பகுதியின் பயன்பாட்டு அளவுகளை கட்டுப்படுத்த பதிவு மற்றும் இட ஒதுக்கீடு திட்டத்தை பூங்கா சேவை செய்கிறது.
பனிச்சரிவு மலைகள்[தொகு]
ஒலிம்பிக் தேசிய பூங்காவின் மையப்பகுதியில் ஒலிம்பிக் மலைகள் உயர்ந்து காணப்படுகின்றன. இம்மலையின் பக்கங்கள் மற்றும் முகட்டு வரைகள் பனிப்பாறை களால் சூழப்பட்டுள்ளன. மலைகள் தானாகவே ஜுவான் டி ஃபுகோ தட்டு புறணிக் குமைதலுடன் தொடர்புடைய திரள் கடற்கரை முகடுகளால் ஆக்கப்பட்டவையாகும். மண்ணியல் கலவையானது எரிமலைப்பாறை மற்றும் பெருங்கடல் படிவுப்பாறை ஆகியவற்றின் ஆர்வமிகு கலவையாகும். இத்தொடரின் மேற்கத்திய பாதிப்பகுதி மவுண்ட் ஒலிம்பசால் (7965 அடி உயரம்) ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. மவுண்ட் ஒலிம்பஸ் அதிகளவில் பனிப்பொழிவைப் பெற்று எரிமலையல்லாத முகடுகளில் பனிப்பாறை நகர்வைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "NPS Annual Recreation Visits Report". National Park Service. https://irma.nps.gov/Stats/SSRSReports/System%20Wide%20Reports/5%20Year%20Annual%20Report%20By%20Park. பார்த்த நாள்: 2018-02-28.
- ↑ "Olympic National Park: Directions". National Park Service. http://www.nps.gov/olym/planyourvisit/directions.htm. பார்த்த நாள்: 2014-11-11.
- ↑ "The Economy of the Olympic Peninsula and Potential Impacts of the Draft Congressional Watershed Conservation Proposal". Headwaters Economics (Bozeman, Montana). pp. 6 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305000641/http://headwaterseconomics.org/wphw/wp-content/uploads/olympic-peninsula-report.pdf. பார்த்த நாள்: 2014-11-11.
- ↑ National Geographic Guide to National Parks of the United States (7th ). Washington, DC: National Geographic Society. 2011. பக். 402.
- ↑ "Park Newsletter July/August 2009". National Park Service. http://www.nps.gov/olym/parknews/park-newsletter-july-august-2009.htm. பார்த்த நாள்: 2011-07-08.
- ↑ "Proclamations and Orders Relating to the National Park Service - Mount Olympus National Monument". National Park Service. March 2, 1909 இம் மூலத்தில் இருந்து March 13, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160313094100/http://www.nps.gov/legal/Proclamations_and_Orders/Proclamations_and_Orders_Vol_II/17_Appendix_III.pdf. பார்த்த நாள்: October 24, 2016.
- ↑ "The National Parks Index 2009–2011". National Park Service. http://www.nps.gov/history/history/online_books/nps/nps/part2.htm#olym. பார்த்த நாள்: 2011-07-08.
- ↑ "Olympic Wilderness". Wilderness.net. http://www.wilderness.net/index.cfm?fuse=NWPS&sec=wildView&WID=428. பார்த்த நாள்: 2011-07-08.
- ↑ "Olympic National Park: Coast". National Park Service. http://www.nps.gov/olym/naturescience/coast.htm. பார்த்த நாள்: 2009-08-23.