ஒற்றைக்கோளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூற்று: 40°44′47″N 73°50′41″W / 40.746426°N 73.844819°W / 40.746426; -73.844819

ஒற்றைக்கோளமும் பூங்காவும் - ஆகத்து 2010

ஒற்றைக்கோளம் (Unisphere) புவியின் சார்பீடாக எஃகினால் கட்டமைக்கப்பட்ட 140 அடி உயர, கோளமாகும். நியூயார்க் நகரத்தின் குயின்சு பரோவில் பிளஷிங் மெடோசு–கோரோனா பூங்காவில் அமைந்துள்ள இந்தக் கட்டமைப்பு இந்த பரோவிற்கான அடையாளமாக விளங்குகிறது.

விண்வெளி யுகத்தை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்ட ஒற்றைக்கோளம் 1964-65 நியூயார்க் உலகக் கண்காட்சியின் தோற்றவுருவாக திட்டமிடப்பட்டது. இந்தக் கண்காட்சியின் கருத்துரு "புரிதல் மூலம் அமைதி" என்பதற்கேற்ப ஒற்றைக்கோளம் உலக கூட்டுச்சார்பை வலியுறுத்துகிறது.[1] இதனை கில்மோர் டி. கிளார்க் என்பவர் வடிவமைத்துள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

பிற வலைத்தளங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றைக்கோளம்&oldid=1726998" இருந்து மீள்விக்கப்பட்டது