ஒரு பக்க - மறு பக்க மாற்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு பக்க -மறு பக்க மாற்றியம் என்பது ஆங்கிலத்தில் Cis - trans isomerism என்றும் Geometrical isomerism என்றும் அழைக்கப்படும். இத்தகைய மாற்றியம் கரிம வேதியியலில் ஆல்கீன்களிலும் சைக்ளோஹெக்சேன் போன்ற வளையச் சேர்மங்களிலும் கனிம வேதியியலில் அணைவுச் சேர்மங்களிலும் காணப்படும்.

இம்மாற்றியம் ஏற்பட முக்கியக் காரணம் - கரிம வேதியியலில் அணுக்களுக்கிடையே தென்படும் தடைசெய்யப் பட்டுள்ள சுழற்சி (Restricted rotation) ஆகும். அணுவுச் சேர்மங்களில் ஒரே மாதிரியான அணுக்கள் (அ) தொகுதிகள் வெட்ட வெளியில் (Space) வெவ்வேறு இடங்களில் உள்ளதாலும் ஆகும்

கரிம வேதியியலில்-ஒரு பக்க - மறு பக்க மாற்றியம் abC = Cab , abC = Cad மற்றும் abC = Cde போன்ற் ஆல்கீன்களில் மட்டும் தான் இம்மாற்றியம் உண்டு. இங்கு C என்பது கரிமத்தையும், a , b, d, e என்பவை கரிம அணுக்களுடன் சேர்ந்துள்ள வெவ்வேறு தொகுதிகளையும் குறிக்கும்.

(சான்று) டைகுளோரோ எத்திலீன், CHCl = CHCl