ஒரு கூர்வாளின் நிழலில் (நூல்)
| ஒரு கூர்வாளின் நிழலில் (நூல்) | |
|---|---|
| ஆசிரியர்(கள்): | தமிழினி |
| வகை: | தன்வரலாறு |
| துறை: | வரலாறு |
| இடம்: | நாகர்கோயில் 629001 |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 271 |
| பதிப்பகர்: | காலச்சுவடு |
| பதிப்பு: | முதற் பதிப்பு 2016 மே |
| ஆக்க அனுமதி: | மகாதேவன் ஜெயக்குமரன் |
ஒரு கூர்வாளின் நிழலில் என்பது ஒரு தன் வரலாற்று நூலாகும். இதை எழுதியவர் சிவகாமி ஜெயக்குமரன் என்னும் தமிழினி ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிரணித் தலைவியாக இருந்தவர். இவர் புற்று நோயினால் இறந்த பிறகு இந்த நூல் வெளியிடப்பட்டது.[1] இந்த நூல் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இவர் போராளியாக இருந்த காலத்திலேயே எழுத்திலும், வாசிப்பிலும் ஈடுபாட்டுடன் பல கட்டுரைகளையும், கதைகளையும், கவிதைகளையும் எழுதினார். இவரது எழுத்துக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகங்களான சுதந்திரப் பறவைகள், வெளிச்சம், நாற்று, ஈழநாதம் போன்றவற்றில் வெளிவந்தன. இவர் சிறையிலிருந்த காலத்திலும் சிறை மீண்ட பிறகும் இவை தனி நூலாக வெளிவந்தன.
நூலடக்கம்
[தொகு]இந்த நூலில் தமிழினியின் சிறுவயது பருவம், மாணவப்பருவத்தில் விடுதலைக்கு ஆதரவான செயல்பாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைதல், அங்கு இயக்கப்பணிகளில் ஈடுபடுதல், ஆயுதப் பயிற்சி பெறுதல், சமாதானக் கால செயல்பாடுகள், இறுதிப்போர் காலகட்டம், சரணடைதல், சிறை செல்லல், புனர்வாழ்வு முகாம், விடுதலை ஆகிய காலகட்டங்களைப் பற்றிய நினைவோடையாக இந்த நூல் உள்ளது.
நூல் அத்தியாயங்கள்
[தொகு]- பாதை திறந்தது
- போருக்குள் பிறந்தேன்
- ஆயுதப் பயிற்சி பெற்ற அரசியல் போராளி
- தமிழ் மக்களும் ஆயுதப் போராட்டமும்
- ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்
- கிழக்கு மண்ணின் நினைவுகள்
- உண்மையற்ற சமாதானமும் உருக்குளைந்த மக்களின் வாழ்வும்
- நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்
- சரணடைவும் சிறைச்சாலையும்
- புனர்வாழ்வு
நூல் பற்றிய திறனாய்வுகள்
[தொகு]இந்த நூல் முழுமையாக தமிழினியால் எழுதப்பட்டது அல்ல; இதில் இடைச் சொருகல்களும், முரண்பாடுகளும் உள்ளன என்ற விமர்சனம் உள்ளது.[2] "இந்நூலை தமிழினியின் பெயரால் வேறொருவர் எழுதியிருக்கவோ, அல்லது அவர் எழுத்தில் இடைச் செருகல் செய்திருக்கவோ கூடும் என்பதற்கான அகச் சான்று ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் சிங்களக் கூர்வாளின் நிழலில் தமிழர்தம் உயிரும் மானமும் குதறப்பட்ட கொடுமைகள் தெரிந்தும் தமிழினி அவற்றைச் சுட்டாமல் கூட விட்டிருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. நடந்திருப்பது செருகல் அல்ல, உருவலே எனத் தோன்றுகிறது" என தியாகு இந்நூலைப்பற்றிய திறனாய்வில் குறிப்பிட்டார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஒரு கூர் வாளின் நிழலில்': தமிழினியின் கணவர் கருத்து". செய்தி. பிபிசி. 17 மார்ச் 2016. Retrieved 14 சனவரி 2017.
- ↑ "கூர்வாளின் நிழல்". http://www.yarl.com. Retrieved 15 சனவரி 2017.
{{cite web}}: External link in(help)|publisher= - ↑ "தமிழினியக்கா!". கட்டுரை. கீற்று. 20 ஆகத்து 2016. Retrieved 15 சனவரி 2017.