ஒரிசா பாலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரிசா பாலு
தாய்மொழியில் பெயர்சிவ பாலசுப்பிரமனி
பிறப்புசிவ பாலசுப்பிரமனி
ஏப்ரல் 7, 1963 (1963-04-07) (அகவை 59)
திருச்சி ,உறையூர் , தமிழ்நாடு
தேசியம்இந்தியா
பணிஆய்வாளர்
அறியப்படுவதுகுமரிக்கண்டம் மற்றும் லெமூரியா கடல் ஆய்வுகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கடல் ஆமை மற்றும் குமரி கண்டம் ஆய்வு
சமயம்தமிழ் மதம்

ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்ரமணி (பிறப்பு: ஏப்ரல் 7, 1963) தமிழக ஆய்வாளர். தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வருபவர்.[1] தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் பண்டைய மரபுசார் அறிவை பின்புலமாகக் கொண்டு ஆய்வு செய்து வருபவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சிவ பாலசுப்பிரமனி திருச்சி உறையூரில் பிறந்தவர். பின் தமிழகத்தின் விழுப்புரம், புதுவை நெய்வேலி சென்னை போன்ற பல இடங்களில் வளர்ந்து இயற்பியலில் தேர்ச்சி பெற்று சுரங்கம் மற்றும் வெளி நாட்டு கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறியியல் துறையில் பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்து அங்கு இருந்து இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர்.

பணி[தொகு]

தற்போது ஆர். ஏ. ஆர். என்ற பனாட்டு நிறுவனத்தில் உயிரி மருந்தியல் மற்றும் மாற்று எரிபொருள் துறையில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை நடத்தி வருகிறார். ஒரிசாவில் கனிம வள கண்டுபிடிப்பு ஆய்விற்காக ஆஸ்திரேலிய புவி இயற்பியல் நிறுவனத்தின் செய்மதிகளின் உதவியுடன் விமான மூலமான ஆய்வுகளில் தேர்ச்சி பெற்று அந்த ஆய்வுகளை கள ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யும் குழுவில் பணி புரிந்தவர். தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வருபவர், ஒரிசா புபனேஸ்வர் தமிழ் சங்கத்தில் துவக்க உறுப்பினராகச் சேர்ந்து, பல பொறுப்புகளில் இருந்து 2002-2003 செயலர் ஆக பணியாற்றி தமிழர்களை ஒரிசாவில் ஒருங்கிணைத்தார். அவர்களை உலக ஏனைய தமிழ் மக்களோடு நெருங்கி பழக வைத்தவர், உலக தமிழ் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆர்வம் காட்டி வருபவர்.

கலிங்க தமிழ் தொடர்புகள், தமிழ் - கலிங்க தென் கோசல, ஒட்டர தொடர்பான தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

அதே போல் இனப் பெருக்கத்திற்கு தமிழக ஒரிசா கடற்கரையில் வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகங்களாய் மாற்றப்பட்டதையும், ஆமைகள் தம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகளை பின்பற்றியே தமிழ் கடலோடிகள் உலகம் முழுவதையும் வலம் வந்தனர் என்ற ஆய்வு கருத்தையும் முன்வைத்தார். ஆமைகள் தொடர்ப்பான இடங்கள் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்டு தமிழ் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்து வருபவர். அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிருபித்து வருபவர்.[2] கடலோடிகளை மீனவர்களை வெறும் பாய் மரத்தில், மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்று சூழல் அறிவு பெற்றவர்களாக பார்ப்பவர். கடல் வள மேலாண்மையின் உலக நடப்புகளை மீனவர்களுக்கு பயிற்சி தந்து வருகிறார்

தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலை காக்க வேண்டி, தமிழகம் முழுவதும் காணொளி காட்சிகள் நடத்தி வருகிறார். முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வருகிறார்.

கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராய் பணிபுரிபவர். மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள் , மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம், கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். தற்சமயம் சென்னையில் வசித்து வரும் இவர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை துவங்கி உலக மக்களுக்கு தமிழருடைய தீபகற்ப கடல் சார் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த இயங்கி வருபவர். இதுவரை 500 இடங்களுக்கு மேலாக சொற்பொழிவுகள் ஆற்றி இருக்கிறார்.

தற்போதைய இந்த கோவிட்-19 காலகட்டத்தில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட உலகளாவிய இளந்தமிழர் குழுவிற்கு வழிகாட்டியாக உள்ளார். உலக அளவில் இருக்கும் தமிழ் குழந்தைகளை இணைத்து அவர்களின் பெற்றோரின் துணையுடன் அவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கிறார்.

குமரிக்கண்டம் நோக்கிய ஆய்வு[தொகு]

குமரிக்கண்டம் மற்றும் லெமூரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக மீன்கள் இனபெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் மக்கள் வாழ்ந்த நில பகுதிகள் என்று செய்மதி, நவீன கடல் சார் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கடலில் கள ஆய்வு செய்து லெமுரியா குமரிகண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென் புலத்தார் போன்ற கருதுகோள்களை தமிழ் இலக்கியம் சொன்ன கடல்கோள்கள் செய்திகளின் மூலம் ஒப்பிட்டு கடலில் ஆய்வுகள் பல செய்து அவையின் அடிப்படை உண்மைகள் என்ன என்று கடலில் கள ஆய்வுகள் மூலம்நிருபித்து வருகிறார். குமரிக்கடலில் கடலாய்வு செய்து அவையின் அடிப்படை உண்மைகள் என்ன என கள ஆய்வுகள் மூலம் நிரூபித்து வருகிறார். கடலில் மூழ்கிய தீவுகள் மூழ்கியுள்ள இடிபாடுகள் இன்று மீன்களின் இனப்பெருக்க இடமாய் மாறிவருவதைக் கண்டு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பலன் கிடைக்கும் வண்ணம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தரை பகுதியைவிட கடலில் காணப்படும் தமிழர்களின் சுவடுகளை ஆராய வேண்டும்: தமிழ்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு வலியுறுத்தல்". Hindu Tamil Thisai. 2021-11-22 அன்று பார்க்கப்பட்டது.
  2. "ஆமைகளின் வழித்தடம் கண்டு கடலோடியவன் ஆதித் தமிழன்". தினமணி. மே 02, 2013. doi:03 May 2013. http://dinamani.com/tamilnadu/2013/05/02/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F/article1570939.ece. பார்த்த நாள்: மே 03, 2013. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரிசா_பாலு&oldid=3612081" இருந்து மீள்விக்கப்பட்டது