ஒதகன்தெங்கர்

ஆள்கூறுகள்: 47°36′30″N 97°33′9″E / 47.60833°N 97.55250°E / 47.60833; 97.55250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓதகன் தெங்கர்
Otgon tenger uul 2009.jpg
செப்டம்பர் 2009ல் ஓதகன் தெங்கர்
உயர்ந்த இடம்
உயரம்4,008 m (13,150 ft)[1]
இடவியல் புடைப்பு2,259 m (7,411 ft)[2]
ஆள்கூறு47°36′30″N 97°33′9″E / 47.60833°N 97.55250°E / 47.60833; 97.55250[2]
புவியியல்
அமைவிடம்மங்கோலியா
மூலத் தொடர்கான்காய் மலைகள்

ஓதகன்தெங்கர் (மொங்கோலியம்: Отгонтэнгэр, பொருள். "இளைய வானம்") என்பது மங்கோலியாவில் உள்ள கான்காய் மலைகளின் மிக உயரமான சிகரமாகும். இதன் உயரம் 4,008 மீ ஆகும். இது சவ்கான் மாகாணத்தில் அமைந்துள்ளது. கான்காய் மலைகளில் உள்ள மலைகளில் இதன் உச்சி மட்டுமே நிரந்தர பனிப்பாறையுடன் காணப்படுகிறது. இதன் தென் முகம் தான் மங்கோலியாவிலேயே மிகவும் விரிவான கிரானைட் சுவர் ஆகும். 

பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து, மங்கோலியர்களின் புனித மலைகளில் பல கோபமான தெய்வங்கள் வசிப்பதாக மரபுவழி மங்கோலிய நம்பிக்கைகள் உள்ளன. வச்ரபானி குறிப்பாக ஓதகன் தெங்கருடன் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார்.

உசாத்துணை[தொகு]

  1. by wikimapia.org
  2. 2.0 2.1 "Mongolia: 18 Mountain Summits with Prominence of 1,500 meters or greater". Note: The prominence value listed here was calculated from a summit elevation of 4,000 m. Peaklist.org. Retrieved 2013-03-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒதகன்தெங்கர்&oldid=2446795" இருந்து மீள்விக்கப்பட்டது