ஐர் ஆறு (தெற்கு ஆஸ்திரேலியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐர் ஆறு ( Eyre Creek ) அல்லது ஐர் கிரீக் என்பது ஆத்திரேலிய மாநிலமான தெற்கு ஆஸ்திரேலியாவின் மத்திய வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு தற்காலிக நீர்வழியாகும் .

நீர்வழி[தொகு]

கிளேர் பள்ளத்தாக்கில் ஆபர்னுக்கு வடக்கே வேக்ஃபீல்ட் ஆற்றுடன் சங்கமிக்கும் முன், ஹொராக்ஸ் மலைக்கு கிழக்கே இந்த சிற்றோடை உருவாகி வாட்டர்வேல் மற்றும் லீசிங்ஹாம் வழியாக தெற்கே பாய்கிறது. சிற்றோடை பிரதான வடக்கு சாலையில் செல்கிறது.


ஆத்திரேலிய கண்டத்தின் ஆங்கிலேய நில ஆய்வாளரும், காலனித்துவ நிர்வாகியும் மற்றும் ஜமேக்காவின் ஆளுநராகவும் இருந்தா எட்வர்ட் ஜான் ஐரின் நினைவாக இந்த சிற்றோடைக்கு பெயரிடப்பட்டது.[1] அவர் 1839 ஆம் ஆண்டில் தனது பயணத்தின் போது இப்பகுதியை ஆய்வு செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Painter, Alison. "1 May 1839 Edward John Eyre". Professional Historians Association—South Australia. Archived from the original on 12 October 2020. பார்க்கப்பட்ட நாள் 9 October 2020.