ஐயை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயை என்னும் பெயர் பூண்டு வாழ்ந்த பழங்கால மகளிர் இருவர்.

ஒருவர் தித்தன் மகள் ஐயை. [1] இந்த இளவரசி தன் கால்களில் முத்துப் பரல்களைக் கொண்ட சிலம்பு, கழுத்தில் ஆம்பல்-பூ மாலை, கைகளில் சங்குகளை அறுத்துச் செய்த வளையர், தோள் என்னும் மார்பில் பொன்னை இழைத்துச் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆகியவற்றை அணிந்திருந்தாளாம்.

மற்றொருவர் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் வரும் ஐயை. மற்றும் சிலப்பதிகாரம் காவுந்தி அடிகளைக் “காவுந்தி ஐயை” எனக் குறிப்பிடுகின்றது. [2]

குன்றத்தில் குரவையாடும் மகளிர் தம் தெய்வம் கொற்றவையைப் பரவும்போது “ஐயை” என விளித்துப் பரவுகின்றனர். [3]

சொல் விளக்கம்[தொகு]

தமிழில் ஐ என்னும் உரிச்சொல் வியப்பு என்னும் பொருளைத் தரும்.தொல்காப்பியம் உரியியல்
ஐ என்னும் பெயர்ச்சொல் தலைவனை உணர்த்தும். [4]
தலைவனைக் குறிக்கும் இந்த ஐ என்னும் பெயரிலிருந்து தோன்றிய சொற்கள் ஐயன், ஐயனார்(அய்யனார்), ஐயப்பன், ஐயை போன்றவை.
இவற்றில் ஐயை என்பது பெண்பாற்பெயர். ஏனையவை ஆண்பாற்பெயர்கள். ஆய் என்பது தாயைக்குறிக்கும் சொல். ஆய்ஆய் =தாயின் தாய் . அதாவது பாட்டி. ஆய் என்பது ஐ என மாறி ஆய் ஆய் என்பது ஐயை என மரூவியது. ஐயை என்பதுபாட்டியைக் குறிக்கும் சொல். ஐயை என்பது நமது தாய்வழி தொன்மையான பெண் தெய்வத்தின் பெயர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. அரிபெய் சிலம்பின் ஆம்பலம் தொடலை அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை இழையணி பணைத்தோள் ஐயை தந்தை மழைவளம் தரூஉம் மாவண் தித்தன் – பரணர் பாடல் அகநானூறு 6
  2. தோமறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் காவுந்தி ஐயைக் கைப்பீலியும் கொண்டு மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகு(க) என – சிலப்பதிகாரம் 10 நாடுகாண் காதை காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி – 15 அடைக்கலக்காதை.
  3. வாய்வாட் கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி, மாயவற்கு இளங்கிளை, ஐயை, செய்யவள், - முதலானவை
  4. என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் – திருக்குறள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயை&oldid=2995893" இருந்து மீள்விக்கப்பட்டது