ஐயாத்துரை சிவபாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐயாத்துரை சிவபாதம் (செப்டெம்பர் 21, 1940, அளவெட்டி யாழ்ப்பாணம்) ஒரு மிருதங்க வித்துவான் ஆவார். இவர் தவில், தபேலா, கெஞ்சிரா, கடம், கொன்னக்கோல் போன்ற தாள வாத்தியக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர். ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயது முதல் கலையார்வம் கொண்டு விளங்கினார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும், இலங்கை ரூபவாகினியிலும் உயர்தர இசைக்கலைஞராகப் பணியாற்றி உள்ளார்.[1]

இசைக்குழு[தொகு]

இவர் பார்வதி சிவபாதம் என்ற பெயரில் ஒரு இசைக்குழுவை நடாத்தி வந்தார்.

கலைப்பயிற்சி நிறுவனம்[தொகு]

கிளிநொச்சியில் சிவபாதம் கலையகம் என்ற பெயரில் ஒரு கலைப்பயிற்சி நிறுவனமும் இயங்கி வந்தது.

பட்டங்கள்[தொகு]

  • லய வாத்தியத் திலகம் (இவரின் கலைச் சேவையைப் பாராட்டி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களால் வழங்கப்பட்ட பட்டம்)
  • பல்லியக் கலைமணி (இணுவில் பண்டிதர் பஞ்சாட்சரம் அவர்களால் வழங்கப்பட்ட பட்டம்)
  • கலைச்சுடர் (வலிகாமம் வடக்கு கலாசார பேரவையால் வழங்கப்பட்ட பட்டம்)

விருதுகள்[தொகு]

  • கலைச்சுடர் விருது (2004 - வலிகாமம் வடக்கு கலாச்சார பேரவையால் வழங்கப்பட்டது)
  • கலாபூசண விருது (2008 - கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது ) [2][3][4]

உசாத்துணை[தொகு]

  1. கலைஞர், கலாபூசணம் ஐ. சிவபாதம் I தாய்வீடு I ஏப்ரல் 2012
  2. http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
  3. கிளிநொச்சியில் இடம் பெற்ற வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழா | புதிய ஈழநாடு
  4. ஆளுமை:சிவபாதம் | ஐ. நூலகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயாத்துரை_சிவபாதம்&oldid=2013865" இருந்து மீள்விக்கப்பட்டது