உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதரசன் எரிபொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐதரசன் எரிபொருள் மாசுகளை வெளியிடாத தூய்மையான எரிபொருள். அது ஆக்சிசனுடன் வினைபுரியும் போது நீர் மூலக்கூறுகளை உருவாக்கும். இந்த நீர் மூலக்கூறுகளை கலன்களில் சேகரித்து வைத்தால் பின்னோக்கு வினை அதாவது நீரிலிருந்து ஐதரசன், ஆக்சிசனை பிரிக்கும் வினைக்கும் பயன்படுத்தலாம். இது பெரும்பாலும் மின்வேதிக்கலன்கள், உள்ளெரி பொறி இயந்திரம் உள்ளிட்டவைககள் மூலம் வானகங்கள், மின்னணு பொருட்களுக்கு மின்னூட்டம் செய்ய  பயன்படுத்தப்படுகிறது. இது  விண்கலன்களை உந்த பயன்படுத்தப்படுகின்றது, மேலும் இது வருங்காலங்களில் பயண வாகனங்கள், வானூர்திகளில் எரிபொருளாக திறம்பட பயன்படுத்தவேண்டி அதன் உற்பத்தி பெருக்கம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐதரசன் தனிம வரிசை அட்டவணையில் முதல் தொகுதி, முதல் வரிசையில், முதல் தனிமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது தனிம வரிசை அட்டவணையிலேயே எடை குறைந்த தனிமமாகும். இது குறைந்த எடை உடையதால் வளிமண்டலத்தில் விரவி உள்ளதாலும் இதன் தூய்மையான வடிவத்தை காண்பது அரிது, H2.[1] தூய்மையான ஐதரசன் (H2) காற்றிலுள்ள ஆக்சிசனோடு (O2) எரியும்போது  நீர்  (H2O) மூலக்கூறுகள் உருவாகும் அதனுடன் ஆற்றலும் வெளிப்படும். அதை கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் கூறலாம்.

2H2(g) + O2(g) → 2H2O(g)

(இவ்வினையில் ஐதரசன் தூய ஆக்சிசனோடு அல்லாமல் வளிமண்டல காற்றுடன் வினைபுரிந்தால் நீர் மூலக்கூறுகளுடன் சிறிதளவு நைட்ரசன் ஆக்சைடுகளையும் கொடுக்கும்.)

உற்பத்தி [தொகு]

இயற்கையில் ஐதரசன் தூய்மையாக கிடைப்பதில்லை எனவே தொழிற்சாலைகள் மூலம் செயற்கையாக உற்பத்தி செய்ய அதிக ஆற்றலை செலவழிக்க வேண்டியுள்ளது.[2]  ஐத்ரசனை மின்னாற்பகுப்பு , நீராவிய மெத்தேன் மறுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உற்பத்தி செய்யலாம்.[3] மின்னாற்பகுப்பு முறையில் குறிப்பிட்ட மின்னழுத்தத்தில் (நேர், எதிர்) மின்வாய்களில் மின்னாற்றலை செலுத்தி நீரிலிருந்து தூய்மையான ஐத்ரசனையும் ஆக்சிசனையும் பிரித்தெடுக்கலாம். இந்த முறை மூலம் ஐத்ரசனை மிகக்குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் எளிமையான முறையாகும். நீராவிய மெத்தேன் மறுவாக்க முறை என்பது மீத்தேனிலிருந்து ஐத்ரசனை உற்பத்தி செய்யும் வழிமுறையாகும்,[4] இது தற்போதுள்ள ஒரு முன்னணி வழிமுறை. எனினும் இம்முறை மூலம் ஐத்ரசனை உற்பத்தி செய்யும்போது பக்க விளைபொருட்களாக கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற உலக வெப்பமயமாக்கலுக்கு காரணமான பச்சை வீடு வாயுக்கள் வெளியிடப்படுகிறது.[1]

ஆற்றல் தேக்கி [தொகு]

ஐதரசன் ஒரு ஆகச்சிறந்த ஆற்றல் தேக்கி. இதனை ஒரு எரிபொருள் கலனில் செலுத்தி மின்சாரம், வெப்பத்தை உருவாக்கலாம் அல்லது எரித்து உள்ளெரி பொறி இயந்திரத்தை இயக்கலாம்.[5] இவ்விரண்டு செயல்களிலும் ஐதரசன் ஆக்சிசனுடன் இணைந்து நீர் மூலக்கூறுகளை உருவாக்குகிறது.

மின்னாற்பகுப்பு மூலம் தூய்மையான ஐத்ரசனையும் ஆக்சிசனையும் நீரிலிருந்து உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட ஐதரசன் எரிபொருள் கலனில் எரிபொருளாக பயன்படுத்தலாம். 

பயன்கள் [தொகு]

ஐதரசன் எரிபொருள் விண்வெளிக்கலனை உந்த, மகிழுந்து, படகுகள், வானூர்திகள், கையடக்க/நிலையான  எரிபொருள் கலன்கள்  உள்ளிட்டவைகளுக்கு ஆற்றலை கொடுக்கும் எரிபொருளாக பயன்படுகிறது.[6] ஐத்ரசனை அதி அழுத்த அல்லது தாழ்வெப்ப உருளைகளில் சேமித்து வைப்பது என்பது மிகக்கடினம் என்பதால் அதனை மகிழுந்துகளில் எரிபொருளாக பயன்படுத்த சிக்கல் உள்ளது.[7]

உசாத்துணை[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Altork, L.N. & Busby, J. R. (2010 Oct).
  2. Wang, Feng (March 2015). "Thermodynamic analysis of high-temperature helium heated fuel reforming for hydrogen production". International Journal of Energy Research 39 (3): 418-432. doi:10.1002/er.3263. 
  3. Jones, J.C. (March 2015). "Energy-return-on-energy-invested for hydrogen fuel from the steam reforming of natural gas.". Fuel 143: 631. doi:10.1016/j.fuel.2014.12.027. 
  4. U.S. Department of Energy. (2007 Feb).
  5. Ono, Katsutoshi (January 2015). "Fundamental Theories on a Combined Energy Cycle of an Electrostatic Induction Hydrogen Electrolytic Cell and Fuel Cell to Produce Fully Sustainable Hydrogen Energy.". Electrical Engineering in Japan 190 (2): 1-9. doi:10.1002/eej.22673. 
  6. Colella, W.G. (October 2005). "Switching to a U.S. hydrogen fuel cell vehicle fleet: The resultant change in emissions, energy use, and greenhouse gases.". Journal of Power Sources 150 (1/2): 150-181. doi:10.1016/j.jpowsour.2005.05.092. 
  7. Zubrin, Robert (2007). Energy Victory: Winning the War on Terror by Breaking Free of Oil. Amherst, New York: Prometheus Books. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59102-591-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசன்_எரிபொருள்&oldid=3849239" இலிருந்து மீள்விக்கப்பட்டது