ஏலம் (வணிகம்)
ஏலம் என்பது ஒரு வெளிப்படையான வர்தக முறையாகும். இவ்வழக்கம் பழங்காலந்தொட்டே இருந்துவருவதாகும். உலகில் பலவித ஏலமுறைகள் உள்ளன.
பழங்காலத்தில்
[தொகு]ஒரு காலத்தில் திடகாத்திரமான அடிமை ஆண்கள், அழகான பெண்கள் ஆகியோர் ஏலம் விடப்பட்டனர்.
தற்காலத்தில்
[தொகு]பிரபலமானவர்கள் பயன்படுத்திய பொருட்கள், பழங்கால அரிய பொருட்கள் ஆகியவற்றையும் ஏலம் இடுகின்றனர். கடன் கேட்பவர்களிடம் வங்கிகள் அடமானம் வைத்துக்கொண்டு கடன் அளிக்கின்றன. கடன் திருப்பி செலுத்தப்படாவிட்டால் பிணையம் வைக்கப்பட்ட நகையையோ அல்லது சொத்தையோ ஏலம்விடுவர்.
ஏலமுறைகள்
[தொகு]வெளிப்படையான கேட்பு ஏலம்
[தொகு]ஆங்கிலேய ஏலம் என்று அழைக்கபடும் இது ஏலப்பொருளின் அடிப்படை விலையை ஏலம் விடுபவர் தீர்மானிப்பார் அவர்தீர்மானித்த விலையில் இருந்து வேண்டுபவர்கள் விலையை ஏற்றிக் கேட்கவேண்டும். மற்றவர்களும் போட்டிக்கு வந்தால் விலை கூட்டிக்கொண்டேபோகும். இறுதியில் அதிக விலை கேட்பவருக்கு பொருள் நிச்யமாகும்.[1]
மறைமுக ஏலம்
[தொகு]மறைமுக ஏலத்தை டெண்டர் என்று சொல்வார்கள். அரசின் பணி ஒப்பந்தங்களும், ஏலங்களும் இந்த முறையில்தான் நடக்கும். ஒருவர் கேட்கும் தொகை அடுத்தவருக்கு தெரியாது. ஏலம் கேட்பவர்கள் தொகையை எழுதி முத்திரையிட்ட உறைக்குள் வைத்து அளிக்கவேண்டும். ஒருவர் கேட்பது இன்னொருவருக்கு தெரியாது. குறிப்பிட்ட நாளில் அனைவர் முன்பாக உறைகள் பிரிக்கப்பட்டு பணி ஒப்பந்தம் என்றால் குறைவாக கேட்டவருக்கும், விற்பனை என்றால் கூடுதலாக கேட்டவருக்கும். உறுதியாகும்.[2]
டச்சு ஏலமுறை
[தொகு]இந்த ஏலமுறை சற்று வித்தியாசமானது. இதை வணிகர்களே மக்களை கவரும்வகையில் பெரும்பாலும் மேற்கொள்வர். ஏலம் விடுபவர் ஒரு தொகையைச் சொல்வார், பிறகு அவரே ஏலத்தொகையைக் குறைத்துச் சொல்லியபடி வருவார். வாங்க விரும்பியவர்கள் அவர் அப்போது சொல்லும் விலைக்கு வாங்கலாம். இம்முறையில் பெரும்பாலும் பூக்கள், பழங்கள், காய்கள் போன்றவை ஏலம் விடப்படும்.
விக்ரி ஏலமுறை
[தொகு]இந்த ஏலமுறையானது முத்திரையிடபட்ட இரண்டாவது விலை ஏலம் என்றும் அழைக்கபடுகிறது.[3] 1893 முதல் இருந்து வந்துள்ளது. துவக்கத்தில் அஞ்சல் தலைகள் இம்முறையில் ஏலம்விடப்பட்டன.[4] இந்த ஏலமுறையை 1996 ஆம் ஆண்டு பொருளியலுக்கு நோபல் பரிசு பெற்ற வில்லியம் விக்ரி பொருளாதார ரீதியாக விளக்கினார்.[5] இதனால் இந்த ஏலமுறை விக்ரி ஏலமுறை என்று பெயர்பெற்றது. இது மறைமுக ஏலமுறை ஆகும். முத்திரையிட்ட உறையில் ஏலத்தொகையை குறிப்பிட்டு ஏலதாரர்கள் அளிக்கவேண்டும். உச்சத் தொகை கோரியவருக்கு பொருள் வழங்கப்படும். ஆனால் அவர் கோரிய தோகையை அளிக்கத் தேவையில்லை. அவருக்கு அடுத்து கோரப்பட்ட குறைந்த தொகையை செலுத்தினால் போதும்.[6] நோபல் பரிசை வென்ற ஏல கோடபாடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1247815
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ Krishna, 2002: p9
- ↑ Lucking-Reiley, David (2000). "Vickrey Auctions in Practice: From Nineteenth-Century Philately to Twenty-First-Century E-Commerce". Journal of Economic Perspectives 14 (3): 183–192. doi:10.1257/jep.14.3.183. http://www.aeaweb.org/articles.php?doi=10.1257/jep.14.3.183.
- ↑ Vickrey, William (1961). "Counterspeculation, Auctions, and Competitive Sealed Tenders". The Journal of Finance 16 (1): 8–37. doi:10.1111/j.1540-6261.1961.tb02789.x. https://archive.org/details/sim_journal-of-finance_1961-03_16_1/page/8.
- ↑ Krishna, 2002: p3