ஏர் மொரீசியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏர் மொரீசியசு (Air Mauritius) மொரிசியசு அரசின் ஏற்பில் அந்நாட்டில் செயல்படும் வானூர்தி நிறுவனமாகும். இதன் தலைமையகம் போர்ட் லூயிசில் அமைந்துள்ளது.[1] இதன் முதன்மைத் தளம் சர் சிவசாகர் ராம்கூலம் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.[2]

இதன் 51% பங்குகளை ஏர் மொரிசீயசு ஹோல்டிங்சு நிறுவனம் கொண்டுள்ளது. ஏர் மொரீசியசு ஹோல்டிங்சின் பெரும்பகுதி பங்குகளை மொரீசியசு அரசு கையகப்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவின் முக்கிய வானூர்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

இது மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், ரீயூனியன், ஹொங் கொங் ஆகிய நாடுகளுக்கு வான்வழிப் போக்குவரத்துகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "World Offices". Air Mauritius. Archived from the original on 2012-05-24. பார்க்கப்பட்ட நாள் 24 மே 2012.
  2. "Profile for Air Mauritius". Centre for Aviation. Archived from the original on 31 October 2012. பார்க்கப்பட்ட நாள் 5 September 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_மொரீசியசு&oldid=3759139" இலிருந்து மீள்விக்கப்பட்டது