உள்ளடக்கத்துக்குச் செல்

ஏஎம்டி கே6-2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏஎம்டி கே6-2 ஏஎம்டி நிறுவனத்தால் 28 மே 1998 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புரோசசர் ஆகும். இது நொடிக்கு 266 மெகாஹேட்ஸ் இல் இருந்து 550 மெகாஹேட்ஸ் வரையிலான வேகமுடைய புரோசர்களில் வெளிவந்துள்ளன. இது 64கிலோபைட் முதலாம்மட்ட அதிவேக காஷ் நினைவகத்தைக் கொண்டுள்ளது இதில் 32 கிலோபைட் தரவுகளுக்காகவும் 32 கணினி அறிவுறுத்தல்களுக்காகவும் பயன்படுகின்றது. இது 2.2 வோல்ட் மின்சாரத்தில் இயங்குகின்றது 0.25 மைக்ரோமீட்டர் தொழில்நுடபத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 9.3 மில்லியன் திரான்சிஸ்டர்களைக் கொண்டுள்ளது. இதை சாக்கட் 7 மற்றும் சூப்பர் சாக்கட் 7 உள்ள மதபோட்களில் பொருத்திக் கொள்ளலாம்.

சரித்திரம்[தொகு]

ஏஎம்டி கே6-2 சற்றே பழையதும் விலைஉயர்வான இண்டெல் பெண்டியம் - II போட்டியிடுவதற்கென உருவாக்கப்பட்டது. இரண்டு சிப்களினதும் வினைத்திறன் ஏறத்தாழ ஒன்றே. இதற்கு முந்தைய கே6 புரோசர்கள் பொதுவான வேலைகளுக்கு வினைத்திறனாக இயங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஎம்டி_கே6-2&oldid=1350177" இலிருந்து மீள்விக்கப்பட்டது