சூப்பர் சாக்கட் 7
சூப்பர் சாக்கட் 7 | ||
Specifications | ||
---|---|---|
வகை | ZIF | |
Chip form factors | SPGA | |
தொடுப்புகளின் எண்ணிக்கை (Contacts) | 321 | |
Bus Protocol | P5 | |
FSB | 95, 97, 100 MHz சிஸ்டம் கிளாக் | |
வோல்ட் வீச்சு | 2.0V - 2.4V | |
புரோசசர்கள் | ஏஎம்டி கே6-2 (300 MHz - 550 MHz) ஏஎம்டி கே6-III ஏஎம்டி K6-2+ ஏஎம்டி கே6-III+ சைரிக்ஸ் MII (PR366/250 MHz - PR433/300 MHz) IDT WinChip 2 (200 MHz - 250 MHz) | |
This article is part of the CPU socket series |
சூப்பர் சாக்கட் 7 அல்லது சூப்பர் 7 என்றழைக்கப்படும் சாக்கட் ஆனது சாக்கட் 7 இன் ஓர் விரிவாக்கம் ஆகும். இது ஆகக்கூடுதலாக நொடிக்கு 100 மெகாஹேட்ஸ் வேகத்திலான FSB ஐ உடையது. சூப்பர் சாக்கட் 7 ஆனது ஏஎம்டி கே6-2 மற்றும் கே6-iii புரோசர்கள் மற்றும் சைரிக்ஸ் எம்-ii புரோசர்களை ஆதரிக்கின்றது. இது சாக்கட் 7 உடன் பின்னோக்கிய ஒத்திசைவு உடையது. அதாவது சாக்கட் 7 இல் பாவிக்கக்கூடிய புரோசரை சூப்பர் சாக்கட் 7 உம் ஆதரிக்கும் எனினும் சூப்பர் சாக்கட் 7 ஐ ஆதரிக்கும் புரோசர்கள் சாக்கட் 7 ஐ ஆதரிக்கும் என்றாகாது.
ஏஎம்டி இண்டெல்லின் சாக்டினையே இதற்கு முன்னர் பாவித்தாலும் சட்டரீதியாக இதுவே ஏஎம்டி பாவித்த இறுதி இண்டெலுடன் ஒத்திசைவான சாக்கட் ஆகும். FSB இன் வேகத்தை நொடிக்கு 66 மெகாஹேட்ஸ் இல் இருந்து நொடிக்கு 100 மெகாஹேட்ஸ் வேகமாக அதிகரித்ததால் ஏஎம்டிக்கு அனுகூலங்கள் ஏற்பட்டது.
இந்த சாக்கட்டானது வியாபார ரீதியில் மலிவானது என்றாலும் இதை நடைமுறைப்படுத்த முயன்ற வயா சிஸ் போன்றவற்றின் தரம் மிகவும் குறைவாகவே இருந்தது. எனினும் வயா பின்னர் கே6-iii பெண்டியம் !!! புரோசர்களுக்கான மதர்போட்டில் தரத்தை உறுதிப்படுத்திக் கொண்டது. ஏஎம்டி புரோசர்கள் ஒத்திசைவற்ற புரோசர்களை வியாபார ரீதியாக விற்பாதக் குற்றசாட்டுக்கள் பரவியதால் அத்லோன் புரோசர்களுக்கு தரநிர்ணய நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினர்.