உள்ளடக்கத்துக்குச் செல்

எழுமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருங்கரடி விண்மீன் குழாமில் "எழுமீன்" விண்மீன் கூட்டம் (பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது).

எழுமீன் அல்லது சப்தரிசி என்றழைக்கப்படும் விண்மீன் கூட்டம் எளிதாக வானில் காணக்கூடிய ஏழுமீன்கள் அடங்கிய ஒரு விண்மீன் கூட்டம். இதனை ஆங்கிலத்தில் Ursa Major (பெருங்கரடி) என்றும் அமெரிக்காவில் "Big Dipper" (பெரும் கைவண்டி) [1][2][3][4] என்றும் அழைக்கின்றார்கள். இந்த ஏழு விண்மீன்களில் ஆறு மீன்கள் இரண்டாம் அலகு வெளிச்சம் கொண்டவை. நான்கு விண்மீன்கள் ஒரு தொட்டிபோன்ற பகுதியுடைய வண்டியின் நான்கு முனைகள் போலவும், மூன்று விண்மீண்கள் தொட்டியின் கைப்பிடி போலவும் காட்சியளிக்கும். கடலில் செல்லும்பொழுது வழியறிய (வடதிசையை அறிய) மிக முக்கியமான வடமீன் (போலாரிசு, Polaris) என்னும் மீனை அடையாளம் காண இந்த ஏழுமீன் கூட்டம் உதவும். கைப்பிடி போல் உள்ள பகுதியில் இருந்து விலகி உள்ள தொட்டியின் பகுதியாகிய இரண்டு விண்மீன்களை இணைத்து நீட்டினால் வடமுனை விண்மீனைக் காணலாம். தொட்டியின் ஆழம் போல ஏறத்தாழ 5 மடங்கு நீளம் நீட்டிய இடத்தில் இருக்கும். இந்த வடமீன், எழுமீன் கூட்டத்தைப்போலவே காட்சியளிக்கும் இன்னொரு சிறிய எழுமீன் கூட்டத்தின் கைப்பிடியின் கடைசி மீனாக இருக்கும். இந்த சிறிய எழுமீன் கூட்டத்தைச் சிறிய கரடி (Ursa minor) அல்லது சிறிய தொட்டி என்றழைப்பார்கள்.

பெயர்களும் இடங்களும்

[தொகு]
கவாயி (Kauai) என்னும் இடத்தில் இருந்து பார்க்கும்பொழுது எழுமீன் கூட்டத்தின் தோற்றாம்.

இலத்தீன மொழியில் ஊர்சா (Ursa) என்றால் கரடி என்று பொருள்படும், Major என்பது பெரிய என்று பொருள்படும். எனவே பெரிய கரடி அல்லது பெருங்கரடி என்று குறிக்கப்பெறுகின்றது. ஏழு விண்மீன்கள் உள்ளதால் எழுமீன் என்று சங்கக் காலம் தொட்டு வழங்கப்பெறுகின்றது. நற்றிணை 231 இல் "கைதொழு மரபி னெழுமீன் போல " என்று குறிக்கப்பெற்றுள்ளது.

மேற்குலக வானியல்

[தொகு]

கரடி என்பது ஓமரின் கிரேக்க மரபிலும், மெசபத்தோமியாவின் மரபில் "wain" என்றும் குறிக்கப்பெறுகின்றது[5] In இலத்தீன், these seven stars were known as the "Seven Oxen" (septentriones, from septem triōnēs).[6]

அயர்லாந்திலும் ஐக்கிய இராச்சியத்திலும் இந்த எழுமீன் கூட்டத்தை கலப்பை (Plough) என்றழைக்கின்றானர். இடாய்ச்சு மரபில் பெரிய வண்டி (Großer Wagen)

விண்மீன்கள்

[தொகு]

பெருங்கரடி என்னும் எழுமீன் கூட்டத்துக்குள் பேயர் குறியீடு (Bayer designation) என்பதன்படி கிரேக்க எழுத்துகளின் வரிசைப்படி பெயர்கள் தொட்டிப் பகுதியில் இருந்து கைப்பிடி வரை குறிக்கப்பெறுகின்றது.

எழுமீனின் தொட்டி போன்ற பகுதியும் கைப்பிடியின் பகுதியையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருந்து பிடித்த படம். மீசாரும் (Mizar) அல்காரும் (Alcor) வலப்புறத்தில் மேலே உள்ளன.
எழுமீனைப் பேராசிரியர் சென் உவாலின் (Prof. Chen Hualin) தான்சானியாவில் தக்காவா, மோரோகொரொ (Dakawa, Morogoro) என்னும் இடத்தில் பிப்பிரவரி 16, 2018 அன்று நள்ளிரவில் எடுத்தப் படம்.
Proper
Name
பேயர்
குறியீடு
வெளிச்சத்
தோற்ற அலகு
தொலைவு
(ஒளியாண்டுகள்)
தபி (Dubhe) α UMa 1.8 124
மெராக்கு (Merak) β UMa 2.4 79
பெக்குதா(Phecda) γ UMa 2.4 84
மெகுரேசு (Megrez) δ UMa 3.3 81
அலியோத்து (Alioth) ε UMa 1.8 81
மிசார் (Mizar) ζ UMa 2.1 78
அல்காயிது (Alkaid) η UMa 1.9 101
எழுமீனில் உள்ள விண்மீன்களின் தோற்ற வெளிச்சத்தின் அலகுகள். இன்னும் நன்றாகப் பார்க்கச் சொடுக்கவும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. (2008) "African Cultural Astronomy". {{{booktitle}}}, 53. DOI:10.1007/978-1-4020-6639-9_5.
  2. Olson, R. J. M.; Pasachoff, J. M. (1992). "The 1816 Solar Eclipse and the Comet 1811I in Linnell's Astronomical Album". Journal for the History of Astronomy 23: 121. doi:10.1177/002182869202300204. Bibcode: 1992JHA....23..121O. 
  3. John C. Barentine (4 April 2016). Uncharted Constellations: Asterisms, Single-Source and Rebrands. Springer. pp. 16–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-27619-9.
  4. Nemiroff, R.; Bonnell, J., eds. (21 April 2013). "Big Dipper". Astronomy Picture of the Day. NASA.
  5. Homer. "Book XVII". The Iliad. Translated by Samuel Butler. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  6. "Merriam-Webster dictionary". பார்க்கப்பட்ட நாள் 2017-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுமீன்&oldid=3033155" இலிருந்து மீள்விக்கப்பட்டது