பெருங்கரடி (விண்மீன் குழாம்)
பெருங்கரடி | |
விண்மீன் கூட்டம் | |
பெருங்கரடி இல் உள்ள விண்மீன்கள் | |
சுருக்கம் | UMa |
---|---|
Genitive | Ursae Majoris |
அடையாளக் குறியீடு | பெருங்கரடி |
வல எழுச்சி கோணம் | 10.67 h |
நடுவரை விலக்கம் | +55.38° |
கால்வட்டம் | NQ2 |
பரப்பளவு | 1280 sq. deg. (3 வது) |
முக்கிய விண்மீன்கள் | 7, 20 |
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு | 93 |
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள் | 13 |
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள் | 7 |
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள் | 8 |
ஒளிமிகுந்த விண்மீன் | எப்சிலான் உர்சே மெஜோரிஸ் (அலியோத்) (1.76m) |
மிக அருகிலுள்ள விண்மீண் | லலாண்டே 21185 (8.31 ly, 2.55 pc) |
Messier objects | 7 |
எரிகல் பொழிவு | ஆல்ஃபா அர்சா மெஜோரிட்ஸ லியோனிட்ஸ்-அர்சிட்ஸ் |
அருகிலுள்ள விண்மீன் கூட்டங்கள் | Draco Camelopardalis Lynx Leo Minor Leo கோமா பெரனிசியஸ் Canes Venatici Boötes |
Visible at latitudes between +90° and −30 தெற்கு°. ஏப்ரல் மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம். |
பெருங் கரடி (Ursa Major) என்பது, ஆண்டு முழுதும் வட அரைக்கோளத்தில் காணப்படுகின்ற விண்மீன் கூட்டம் ஆகும். இப்பெயர் இலத்தீன் மொழியில் அர்சா மேஜர் (Ursa = கரடி, major = பெரிய) எனப் பொருள்படும். இதனை தமிழில் எழுமீன் என்றும் சப்தரிஷி மண்டலம் என்றும் அழைப்பர்.[1][2][3]
குறிப்பிடத்தக்க அம்சங்கள்
[தொகு]இக் கரடி உருவின் பின்பகுதியிலும் வாலிலும் அமைந்துள்ள, ஏழு ஒளி மிகுந்த விண்மீன்கள் பெரிய கரண்டி எனப் பொருள்படுகின்ற, பிக் டிப்பர் (Big Dipper) என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றன. இவற்றுள், பிக் டிப்பரில் உள்ள டுப்ஹே, அல்கைட் ஆகிய இரண்டைத் தவிர ஏனையவை அனைத்தும் தனு இராசியில் உள்ள ஒரு பொதுப் புள்ளியை நோக்கிய முறையான இயக்கங்களைக் (proper motions) கொண்டுள்ளன. இது போன்ற இயக்கங்களைக் கொண்ட வேறு சில விண்மீன்களும் அறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்றாக, அர்சா மேஜர் நகர்வுக் கூட்டம் (Ursa Major Moving Group) என அழைக்கப்படுகின்றன.
பிக் டிப்பர் தவிர, இன்னொரு உருவ அமைப்பும் இங்கே காணப்படுகின்றது. இது அராபியப் பண்பாட்டிலிருந்து வந்ததாகும். இது மூன்று இணை விண்மீன்களின் தொகுதியாகும். இத் தொகுதி மானின் பாய்ச்சல் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றது. இவ்விணைகள்:
- *ν மற்றும் ξ அர்சே மஜோரிஸ் (Ursae Majoris), ஆலுலா பொரேலிஸ் (Tania Borealis) மற்றும் ஆஸ்திரேலிஸ் - முதல் பாய்ச்சல்.
- *λ மற்றும் μ அர்சே மஜோரிஸ், தானியா பொரேலிஸ் (Tania Borealis) மற்றும் ஆஸ்திரேலிஸ் - இரண்டாம் பாய்ச்சல்.
- *ι மற்றும் κ அர்சே மஜோரிஸ், தாலிதா பொரேலிஸ் (Talitha Borealis) மற்றும் ஆஸ்திரேலிஸ் - மூன்றாம் பாய்ச்சல்.
இவை இவ்விண்மீன் கூட்டத்தின், தென்மேற்கு எல்லையோரம் கரடியின் பாதங்கள்போல் காணப்படுகின்றன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chandra: Constellation Ursa Major". chandra.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-07-07.
- ↑ "Constellation | COSMOS". astronomy.swin.edu.au. பார்க்கப்பட்ட நாள் 2022-07-07.
- ↑ "Constellations Lacerta–Vulpecula".