எல்லெசுமியர் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எல்லெசுமியர் தீவு
Ellesmere Island.svg
புவியியல்
அமைவிடம்வட கனடா
ஆள்கூறுகள்80°10′N 079°05′W / 80.167°N 79.083°W / 80.167; -79.083 (Ellesmere Island)ஆள்கூறுகள்: 80°10′N 079°05′W / 80.167°N 79.083°W / 80.167; -79.083 (Ellesmere Island)
தீவுக்கூட்டம்குயீன் எலிசபெத் தீவுகள்
பரப்பளவின்படி, தரவரிசை10வது
உயர்ந்த புள்ளிபார்பீயூ கொடுமுடி
நிர்வாகம்
கனடா
ஆட்சிப்பகுதி நூனவுட்
பெரிய குடியிருப்புகிரிசே பியோர்ட் (மக். 141)
மக்கள்
மக்கள்தொகை146 (2006)

எல்லெசுமியர் தீவு கனடாவின் ஆட்சிப்பகுதியான நுனாவுத்தைச் சேர்ந்த கிக்கிக்தாலுக் பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகும். கனடாவின் ஆக்டிக் தீவுக்கூட்டங்களுக்குள் அடங்கிய இது, குயீன் எலிசபெத் தீவுகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. 196,235 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத் தீவு உலகின் பத்தாவது பெரிய தீவும், கனடாவின் மூன்றாவது பெரிய தீவும் ஆகும். ஆர்க்கிட் மலைத்தொடர்த் தொகுதி எல்லெசுமியர் தீவின் பெரும்பகுதியை மூடியுள்ளது. இதனால் கனடாவின் ஆர்க்டிக் தீவுக்கூட்டங்களில் உள்ள தீவுகளில் கூடிய மலைப்பாங்கான தீவு இதுவாக உள்ளது. "ஆர்க்டிக் வில்லோ" எனப்படும் மரவகையே இத்தீவில் வளரும் ஒரே மரவகை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லெசுமியர்_தீவு&oldid=1353992" இருந்து மீள்விக்கப்பட்டது