உள்ளடக்கத்துக்குச் செல்

எலனிய மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலனிய மெய்யியல் (Hellenistic philosophy) என்பது (கிமு 300 முதல் கிபி 200 வரையிலான) எலனியக் காலத்தில் நிலவிய மேற்கத்திய மெய்யியலையும் பண்டைய கிரேக்க மெய்யியலையும் குறிக்கும்.

பின்னணி[தொகு]

கிமு 300 சார்ந்த எலனியக் காலத்திய உலகம்.

எலனியக் காலம் மாமன்னர் அலெக்சாந்தரின்(கிமு 356-கிமு 323) வெற்றிகளுக்குப் பின்னர் கிமு 323 இல் (அரிசுட்டாட்டில் கிமு 322 இல் இறந்தார்) அவர் இறந்ததும் தொடங்குகிறது. அலெக்சாந்தர் அவருக்கு முந்தைய பண்டைய கிரேக்கப் பண்பாட்டை நடுவண் கிழக்கு நாடுகளிலும் மேற்கத்திய ஆசியாவிலும் பரவச் செய்தார். பண்டைய கிரேக்க மெய்யியல் சாக்ரட்டீசு (அண். கிமு 470-கிமு 399) காலத்தில் தொடங்கியது. சாக்ரட்டீசின் மாணவர் பிளாட்டோ ஆவார்; இவரது மாணவர் அரிசுட்டாட்டில் ஆவார்; அரிசுட்டாட்டில் அலெக்சாந்தருக்குக் கல்வி பயிற்றுவித்தார். செவ்வியல் காலச் சிந்தனையாளர்கள் பெரும்பாலும் ஏதென்சில் வாழ்ந்தனர். எலனியக் கால மெய்யியலாளர்கள் அப்பேரரசின் எல்லையெங்கும் பரவி முனைப்போடு செயலாற்றினர். இந்த உரோமப் பேரரசு காலத்தில் பண்டைய உரோமானிய மெய்யியல் பேரரசு எல்லை முழுவதிலும் ஓங்கியிருந்தது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

தகவல் வாயில்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலனிய_மெய்யியல்&oldid=3951370" இலிருந்து மீள்விக்கப்பட்டது