எர்லிச்மேனைட்டு
Appearance
எர்லிச்மேனைட்டு Erlichmanite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பைரைட்டு |
வேதி வாய்பாடு | OsS2 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 254.33கிராம் |
படிக இயல்பு | பைரிடோமுகப் படிகங்கள் |
படிக அமைப்பு | சமநீளம் |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5-5.5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 8.28 |
அடர்த்தி | 8.28 கி/செ.மீ3 (அளக்கப்பட்டது), 9.59 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது) |
Extinction | |
பொதுவான மாசுகள் | இரிடியம், ரோடியம், உருத்தேனியம், பலேடியம் |
எர்லிச்மேனைட்டு (Erlichmanite) என்பது OsS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓசுமியம் சல்பைடு கனிமமாகக் கருதப்படும் இது இயற்கையிலேயே தோன்றுகிறது. உலோகப் பளபளப்புடன் சாம்பல் நிறத்தில் 5 என்ற மோவின் கடினத்தன்மை மதிப்பும், 9 என்ற ஒப்படர்த்தி மதிப்பும் கொண்டு இக்கனிமம் படிகமாகிறது.[1] வண்டல் செயல்முறைகளின் போது குறிப்பிட்ட மூலப் பாறையிலிருந்து ஈர்ப்பு விசையால் பிரிக்கப்பட்ட உயர் உலோக தாதுக்களின் படிகத் திரட்சியில் காணப்படுகிறது.[2] ஜோசப் எர்லிச்மேன், நாசா அமெசு ஆராய்ச்சி மையத்தில் எலக்ட்ரான் நுண்ணுயிர் ஆய்வாளரான இயோசப் எர்லிச்மேன் நினைவாகக் கனிமத்திற்கு எர்லிச்மேனைட்டு எனப் பெயரிடப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் எர்லிச்மேனைட்டு கனிமத்தை Erl[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Erlichmanite".
- ↑ "Erlichmanite Mineral Data".
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.