உள்ளடக்கத்துக்குச் செல்

எர்மரசு அனல் மின் நிலையம்

ஆள்கூறுகள்: 16°17′28″N 77°21′9″E / 16.29111°N 77.35250°E / 16.29111; 77.35250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்மரசு அனல் மின் நிலையம்
Yermarus Thermal Power station
நாடுஇந்தியா
அமைவு16°17′28″N 77°21′9″E / 16.29111°N 77.35250°E / 16.29111; 77.35250
நிலைசெயல்பாட்டில்
இயங்கத் துவங்கிய தேதிஅலகு 1: மே, 2015; அலகு 2: மார்ச்சு, 2017
உரிமையாளர்கர்நாடகா மின்சார ஆனையம்
இயக்குபவர்ஆர்பிசிஎல்

எர்மரசு அனல் மின் நிலையம் (Yermarus Thermal Power Station) இந்தியாவின் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள எர்மரசு கிராமத்தில் அமைந்துள்ள நிலக்கரி அடிப்படையிலான ஓர் அனல் மின் நிலையம் ஆகும். இந்த மின் உற்பத்தி நிலையம் கர்நாடக மின் கழகத்திற்கு சொந்தமானது. இது இந்தியாவின் முதல் 800 மெகா வாட்டு மீமாறுநிலைப் புள்ளி அனல் மின் நிலையம் ஆகும் பாரத் மிகு மின் நிறுவனம் இந்த மின் திட்டத்திற்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரராக உள்ளது..[1][2]

மின்திறன்

[தொகு]

எர்மரசு அனல் மின் நிலையத்தின் மின்திறன் 1600 மெகாவாட்டு (2x800 மெகாவாட்) திறன் ஆகும்.

நிலை அலகு எண் மின்சாரம் (மெகாவாட்டு) தொடக்கம் தற்பொழுது நிலை
1 ஆவது 1 800 2015 மே வணிக நடவடிக்கை 2017 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது [3]
1ஆவது 2 800 2017 மார்ச்சு தொடக்கம்[4] வணிக நடவடிக்கை 2017 ஏப்ரல்[5]

மேற்கோள்கள்

[தொகு]