எரிபொருள் காரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எரிபொருள் காரணி (Fuel factor) என்பது ஒரு எரிதல் வினையில் உருவாக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடுக்கும் எரிந்துபோன ஆக்சிசனுக்கும் இடையிலுள்ள விகிதம் ஆகும். இவ்விகிதம் fo என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. உமிழ்வு அளவீட்டு முறையின் துல்லியத்தை சரிபார்க்க இந்த விகித அளவு பயன்படுகிறது [1]. கீழ்கண்ட சமன்பாட்டைப் பயன்படுத்தி அத்துல்லியத்தைக் கணக்கிட முடியும்.

fo = (20.9 - %O2)/%CO2,

இவ்வாய்ப்பாட்டிலுள்ள %O2 என்பது உலர் ஆக்சிசனின் கன அளவு சதவீதத்தையும், %CO2 என்பது உலர் கார்பன் டை ஆக்சைடின் கன அளவு சதவீதத்தையும், 20.9 என்பது சுற்றுப்புற காற்றிலுள்ள ஆக்சிசனின் கன அளவு சதவீதத்தையும் குறிக்கின்றன. இக்கணக்கீட்டில் உலர் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவுடன் உலர் காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடின் கன அளவு சதவீதம் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மேலும், உலர் காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடின் அளவில் பாதி ஆக்சிசனின் அளவில் இருந்து கழித்துக் கொள்ளப்படுகிறது. கார்பன் மோனாக்சைடின் அளவை கருத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டே எரிபொருள் காரணி என்ற இத்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிபொருள்_காரணி&oldid=2749723" இருந்து மீள்விக்கப்பட்டது