எய்னோ பிங்கெல்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எய்னோ பிங்கெல்மான்
Heino Finkelmann
பிறப்பு1945
செருமனி, உலோயர் சாக்சோனி, குரோனாவ்
துறைகரிம மற்றும் பலபடி வேதியியல்
பணியிடங்கள்பேதெர்பார்ன் பல்கலைக்கழகம்
யோகன்னசு குட்டன்பெர்க்கு மெயின்சு பல்கலைக்கழகம்
கிளாசுதல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
பிரீபர்க் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆர்சுட் சிடெக்மேயர்
அறியப்படுவதுபலபடி வேதியியல்

எய்னோ பிங்கெல்மான் (Heino Finkelmann) என்பவர் செருமன் நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கரிம வேதியியலாளர் ஆவார். செருமனியின் உலோயர் சாக்சோனி மாநிலத்திலுள்ள குரோனாவ் என்ற நகரத்தில் இவர் பிறந்தார். [1]) திரவ-படிக எலாசுடோமர் என்ற பலபடியின் ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற அறிவியலாளராக இவர் கருதப்படுகிறார். [2]

வாழ்க்கை வரலாறு[தொகு]

பொறியியலில் பட்டம் பெற்ற பின்னர், பிங்கெல்மான் 1972 ஆம் ஆண்டு பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேதியியலாளராக பட்டம் பெற்றார். [1] 1975 ஆம் ஆண்டு இவர் ஆர்சுட் சிடெக்மேயரின் மேற்பார்வையில் பேதெர்பார்ன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [3][1]

யோகன்னசு குட்டன்பெர்க்கிலுள்ள மெயின்சு பல்கலைக்கழகத்தில் எல்மட் இரிங்சுதார்ப் வழிகாட்டுதலின் கீழ் பிங்கெல்மான் முனைவர் பட்டமேற்படிப்பு முடித்தார். [1] மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பிங்கெல்மான் 1978 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை கிளாசுதல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் குந்தர் இரிகேச் குழுவுடன் பணிபுரிந்தார். [1][4][5]

1984 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பிரீபர்க்கின் ஆல்பர்ட் உலுத்விக் பல்கலைக்கழகத்தில் முழுமையான ஒரு பேராசிரியராகவும், பெருமூலக்கூற்று வேதியியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் பிங்கெல்மான் நியமிக்கப்பட்டார். நீர்ம-படிக எலாசுடோமர் என்ற பலபடியின் பக்கச் சங்கிலி கோட்பாடு பிங்கெல்மானின் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும். [6]

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

 • 1984: செருமன் வேதியிலாளர் கழகம் வழங்கிய காரல் தூசுபெர்கு நினைவு பரிசு.[5][7]
 • 2000: கே லூசக் அம்போல்ட்டு பரிசு[5]
 • 2003: ஐரோப்பிய இயற்பியல் கழகம் வழங்கிய இயற்பியல் விருது[5]
 • 2004: பிரான்சு நாட்டின் டவுலூசு பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ முனைவர் பட்டம்[5][8]
 • 2006: பிரித்தானிய நீர்ம-படிக கழகம் வழங்கிய கியார்ச்சு வில்லியம் கிரே பதக்கம்[9][5][2]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Lebenslauf Prof. Dr. Heino Finkelmann" (German). Universität Freiburg (10 March 2006). மூல முகவரியிலிருந்து 2006-08-31 அன்று பரணிடப்பட்டது.
 2. 2.0 2.1 "Heino Finkelmann" (de). Kürschners Deutscher Gelehrten-Kalender Online.
 3. "Curriculum Vitae Prof. Dr. Heino Finkelmann". மூல முகவரியிலிருந்து 2004-07-03 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-07-21.
 4. (in de) (PDF) uni'leben, die Zeitung der Universität Freiburg. Albert-Ludwigs-Universität Freiburg, der Rektor, Prof. Dr. Hans-Jochen Schiewer. 2010. பக். 11. https://www.pr.uni-freiburg.de/publikationen/unileben/unileben-archiv/uni-leben-und-uni-magazin-vor-2015/uni-freiburg-uni-leben-2-2010.pdf. 
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Ansgar Komp, Antoni Sanchez-Ferrer, Kirsten Severing (2010-02-01). "Heino Finkelmann: 65 Years of Devotion to Science". Macromolecular Chemistry and Physics 211 (3): 373. doi:10.1002/macp.200900669. 
 6. Mark Warner, Eugene Michael Terentjev,Liquid Crystal Elastomers, Oxford University Press, 2007. ISBN 978-0-19-852767-1 (Hbk.), ISBN 978-0-19-921486-0 (Pbk.) p. 126
 7. "GDCh-Preise - Carl-Duisberg-Gedächtnispreis" (de). Gesellschaft Deutscher Chemiker e.V. (GDCh) / German Chemical Society (2019-07-10).
 8. Albert-Ludwigs-Universität Freiburg:"Freiburger Unimagazin – ALBERT-LUDWIGS-UNIVERSITÄT FREIBURG" (PDF) (de). Freiburg im Breisgau, Germany: Promo Verlag GmbH (2004-10-05). மூல முகவரியிலிருந்து 2018-02-11 அன்று பரணிடப்பட்டது.
 9. "Gray Medal". British Liquid Crystal Society (2019).
"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்னோ_பிங்கெல்மான்&oldid=2985131" இருந்து மீள்விக்கப்பட்டது