எய்தி ஏம்மல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எய்தி பி. ஏம்மல்
பிறப்புமார்ச் 14, 1960
கலிபோர்னியா
தேசியம்அமெரிக்கர்
துறைகோள் அறிவியல்
வானியல்
புவியியல்
பணியிடங்கள்விண்வெளி அறிவியல் நிறுவனம்
மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் (MIT)
விருதுகள்கிளம்ப்கே இராபர்ட்சு விருது (1995)
அரோல்டு சி. உரே பரிசு (1996)
கார்ல் சாகன் பதக்கம் (2002)

எய்தி பி, ஏம்மல் (Heidi B. Hammel) (பிறப்பு மார்ச் 14, 1960)அல்லது ஃஎய்தி பி. ஃஏம்மல் ஓர் அமெரிக்க வானியலாளரும் கோள் அறியலாளரும் ஆவார். இவர் நெப்டியூனையும் யுரேனசையும் விரிவாக ஆய்வு மேற்கொண்டவர். இவர் வானியல் ஆய்வுக்கான பல்கலைக்கழகங்களின் கழகத்தின் துணைத்தலைவர் ஆவார். இவர் 2002 இல் கார்ல் சாகன் பதக்கத்தைப் பெற்றார். இது பொதுமக்களிடம் கோள் அறிவியல் புரிவையும் விழிப்புணர்வையும் மேம்படுத்தும் அறிவியலாளருக்கு வழங்கப்படுகிறது. இவர் 2003 இல் கண்டுபிடிப்பு இதழ் (Discover Magazine) தேர்வு செய்த50 முதன்மை வாய்ந்த அறிவியல் பெண்மணிகளில் ஒருவராவார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் கலிபோர்னியாவில் பிறந்தார். இவர் மூன்று குழந்தைகளின் தாயார் ஆவார். [1]

மேற்கோள்கள்[தொகு]

பொது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்தி_ஏம்மல்&oldid=3582356" இலிருந்து மீள்விக்கப்பட்டது