எம். நாராயண ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். நாராயண ரெட்டி
Narayana Reddy
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1967–1971
முன்னையவர்அரீசு சந்திர ஏதா
பின்னவர்எம். ராம் கோபால் ரெட்டி
தொகுதிநிசாமாபாத்து
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1972–1978
முன்னையவர்ஆர். பி. ராவ்
பின்னவர்குலாம் சம்தானி
தொகுதிபோதான் சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-09-10)10 செப்டம்பர் 1931
இறப்பு2 பெப்ரவரி 2020(2020-02-02) (அகவை 88)
முன்னாள் கல்லூரிஉசுமானியா பல்கலைக்கழகம்

எம். நாராயண ரெட்டி (M. Narayana Reddy) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். வழக்கறிஞரான இவர் இந்திய மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நாராயண ரெட்டி நிசாமாபாத்தில் உள்ள சுங்கெட்டு கிராமத்தில் பிறந்தார். [1] சதர்காட்டு கல்லூரியிலும் உசுமானியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். [2]

நாராயண ரெட்டி 1967 ஆம் ஆண்டில் சுயேச்சை வேட்பாளராக வெற்றிபெற்று நிசாமாபாத் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [3] மக்களவையில் தனி தெலுங்கானா பிரச்சனையை எழுப்பிய முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அறியப்படுகிறார். [1] 1972 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக போதானில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

நாராயண ரெட்டி 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று நிசாமாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 88 வயதில் இறந்தார் [1] [5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Torchbearer of early Telangana movement and ex-MP Narayana Reddy passes away in Nizamabad". https://www.thehindu.com/news/national/telangana/torchbearer-of-early-telangana-movemement-and-ex-mp-narayana-reddy-passes-away/article30719244.ece. 
  2. "Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
  3. "All Members of Lok Sabha (Since 1952)". பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
  4. "Andhra Pradesh Assembly Election Results in 1972". பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
  5. "నిజామాబాద్ మాజీ ఎంపీ కన్నుమూత". https://m.sakshi.com/news/telangana/former-nizamabad-mp-m-narayana-reddy-passed-away-1260391. 
  6. "మాజీ ఎంపీ నారాయణరెడ్డి కన్నుమూత". https://www.andhrajyothy.com/artical?SID=1025203. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._நாராயண_ரெட்டி&oldid=3813190" இலிருந்து மீள்விக்கப்பட்டது