எம். டி. வி. ஆச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். டி. வி. ஆச்சார்யா
பணிஓவியர்

'எம் டி வி. ஆச்சார்யா’ என்பவர் ஓவியர் ஆவார். இவர் சந்தமாமா என்ற இதழின் கன்னடப் பதிப்பில் பல ஓவியங்களை வரைந்து பிரபலமானவர். இவர் 1992 ஆம் ஆண்டு இறந்தார். இவரது இளமைக் கால வாழ்வில், மைசூர் தசரா கண்காட்சியில் பல ஓவியங்களை வரைந்து பல பரிசுகளைப் பெற்றவர். பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் வானூர்தி நிறுவனத்தில் பணியாற்றினார். இவரது முதல் ஓவியக் கண்காட்சி சென்னையில் 1945 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. குழந்தைகளுக்கான தமிழ் இதழான சந்தமாமாவில் 1947 ஆம் ஆண்டு சேர்ந்தார். பின்னர், இதன் கன்னடப் பதிப்பிற்கு ஆசிரியர் ஆனார். அந்த இதழின் அட்டைப் படங்கள் பலவற்றை வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “தாய்நாடு” என்னும் கன்னட இதழுக்கு கலையாசிரியரானார். இவருடைய பெயரால் ஆச்சார்யா சித்திரகலா பவன் என்ற பெயரில் கலைப் பள்ளியொன்றைத் தொடங்கி, ஓவிய வகுப்புகள் நடத்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._டி._வி._ஆச்சார்யா&oldid=1852606" இருந்து மீள்விக்கப்பட்டது