எம். காந்தராஜ் அர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்
நிதின் காந்தராஜ்
மைசூர் இராச்சியத்தின் 20ஆவது திவான்
பதவியில்
1918–1922
அரசர் நான்காம் கிருட்டிணராச உடையார்
முன்னவர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா
பின்வந்தவர் ஆல்பியன் ராஜ்குமார் பானர்ஜி
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 20, 1870(1870-09-20)
இறப்பு 3 அக்டோபர் 1923(1923-10-03) (அகவை 53)
பெங்களூர்
படித்த கல்வி நிறுவனங்கள் சென்னை கிறித்துவக் கல்லூரி
தொழில் அரசுப் பணி
சமயம் இந்து

சர் எம். காந்தராஜ் அர்சு (M. Kantaraj Urs) ((1870 செப்டம்பர் 20 - 1923 அக்டோபர் 3) இவர் ஓர் இந்திய நிர்வாகி ஆவார். இவர் 1918இல் மைசூர் இராச்சியத்தின் திவானாகப் பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

காந்தராஜ் அர்சு 1870 செப்டம்பர் 20 அன்று பிறந்தார். இவர், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் மைசூர் அரச குடும்பத்திற்கு பாரம்பரிய இராணுவத் தளபதியாக பணியாற்றிய புகழ்பெற்ற கலாலே குடும்பத்தின் (மைசூருக்கு அருகில்) ஒரு வாரிசு ஆவார். இவர் கர்நாடகாவின் மத்தூரில் குடியேறிய குடும்பத்தின் ஒரு கிளையைச் சேர்ந்தவர். இவரது மூத்த சகோதரி கெம்பா நஞ்சம்மணி மைசூர் மகாராஜா பத்தாம் சாமராஜா உடையாரை மணந்தார். மேலும் மகாராணி கெம்பா நஞ்சம்மணி வாணி விலாச சன்னிதானம் என்று அறியப்பட்டார். இவர் 1892-93ல் சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று தனது சமூகத்தின் (உர்ஸ்) முதல் உறுப்பினரானார்.

தொழில்[தொகு]

1894 ஆம் ஆண்டில் மைசூர் மாநில சேவைக்கு காந்தராஜ் அர்சு உதவி ஆணையராக (அட்டவணை II) நியமிக்கப்பட்டார். ஆனல் 1894 திசம்பரில் இவரது மைத்துனரான மகாராஜாவின் அகால மரணத்திற்குப் பிறகு, இவரது சகோதரி மகாராணி 1895 இல் இவரை மைசூரின் ஆட்சியாளர் ஆக்கினார். காந்தராஜ் அர்சு 1895-99 வரை மகாராணியின் சிறப்பு உதவி தனிச்செயலாளராகப் பணியிலிருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

காந்தராஜ் அர்சு தனது சகோதரிமகாராணி கெம்பா நஞ்சம்மணி வாணி விலாச சன்னிதானத்தின் மகள் குமாரி ஜெய லட்சம்மன்னியின் (1881-1924) மூத்த மகளை மணந்தார். இத்தம்பதியருக்கு இராஜகுமாரி லீலாவதி என்ற ஒரு மகள் இருந்தார். மைசூரில் உள்ள மைசூர் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப்படிப்பு மையமான மானசா கங்கோத்ரி என்று இப்போது நன்கு அறியப்பட்ட ஜெயலட்சுமி விலாச மாளிகை இவர்களின் குடியிருப்பு மாளிகையாக இருந்தது.

காந்தராஜ் அர்சு 1923 அக்டோபரில் இறந்தார்.

குறிப்புகள்[தொகு]

  • Mysore Gazetteer. பக். 3143. 
  • Speeches of Sirdar Sir M. Kantharaj Urs Vol-1 by Sirdar K. Basavaraj Urs M.A., LL.B.. பக். 362. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._காந்தராஜ்_அர்சு&oldid=2993884" இருந்து மீள்விக்கப்பட்டது