எம். எம். ராஜேந்திரன்
எம். எம். ராஜேந்திரன் | |
---|---|
ஒடிசா மாநிலத்தின் ஆளுநா் | |
முன்னவர் | சி. ரங்கராஜன் |
பின்வந்தவர் | ராமேஷ்வா் தாக்கூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஏப்ரல் 12, 1935 ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
தொழில் | பொதுப்பணியாளா் துறை நிா்வாகி |
எம். எம். ராஜேந்திரன் (பிறப்பு ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர் 12 ஏப்ரல் 1935) 1957 ஆண்டைய இந்திய ஆட்சிப் பணிப் பிரிவில் முதல் மாணவராக வந்தார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராகவும், பின்னர் ஒடிசா மாநிலத்தின் ஆளுநராக நவம்பர் 15, 1999 முதல் 17 நவம்பர் 2004 வரை இருந்தார். முன்னதாக நியூயாா்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நிதியகத்தின் நிா்வாகக் குழு உறுப்பினராகவும், திட்டக்குழுவின் துணைத்தலைவராகவும் இருந்துள்ளாா். அவர் தென் இந்தியாவின் திருச்சபையைச் சாா்ந்த கிறித்துவா் ஆவார். அவர் இந்தியக் குடியரசுத் தலைவா் பதவிக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த சமூக சமத்துவப் படை கட்சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Another Christian recommended as presidential candidate". ucanindia.in. 2017-01-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது.