எம். அண்ணாமலை (விஞ்ஞானி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். அண்ணாமலை
M. Annamalai
பிறப்பு1945
தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்ஐஐஎசுசி
பணிவிண்வெளி அறிவியல்
பணியகம்இசுரோ
சதீஸ் தவான் விண்வெளி மையம்
விருதுகள்பத்மசிறீ (2011)

எம். அண்ணாமலை (M. Annamalai) இந்தியாவைச் சேர்ந்த தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் ஒரு விண்வெளி விஞ்ஞானி ஆவார். சிறீ அரிகோட்டாவில் உள்ள சதீசு தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குனரான இவர் இசுரோவில் விண்வெளி போக்குவரத்து அமைப்புகள் பிரிவில் மூத்த ஆலோசகர் பதவியை வகிக்கிறார்.[1]

அண்ணாமலை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் விண்வெளி பொறியியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 1970 ஆம் ஆண்டு இசுரோவில் பணியில் சேர்ந்தார். உள்கட்டமைப்பு மேம்பாடு, வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை போன்ற விண்வெளி வாகன ஏவுதலின் பல துறைகளில் பங்களிப்புசெய்த பெருமைக்குரியவராகக் கருதப்படுகிறார். மவுண்ட் அபுவில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் 1.2 எம் அகச்சிவப்பு வானியல் தொலைநோக்கியையும், செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுவாகனங்களைக் கண்காணிப்பதற்காக இசுரோ வலைப்பின்னலுக்கான பல அலைவாங்கி சாதனங்களையும் வடிவமைத்துள்ளார்.[1] 2011 ஆம் ஆண்டு அண்ணாமலைக்கு நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Indian Space Research Organization". 2014. Indian Space Research Organization. Archived from the original on 29 September 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2014.
  2. "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அண்ணாமலை_(விஞ்ஞானி)&oldid=3374594" இலிருந்து மீள்விக்கப்பட்டது