எபி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானியல் பிடாலமிக் அமைப்பில் சந்திரன், சூரியன், கோள்கள் ஆகியவற்றின் , வேகம் மற்றும் திசையின் வேறுபாடுகளை விளக்க பயன்படுத்தப்படும் ஒரு வடிவியல் மாதிரி (model) எபி வட்டங்கள்(epi cycles) (உண்மையில்: கிரேக்கத்தில் வட்டத்தின் மீது) ஆகும். இது முதலில் அப்பல்லோனியஸ் ஆஃப் பெர்கா (Apollonius of Perga) என்பவரால், கிமு 3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முன்மொழியப்பட்டு பின் எகிப்தைச்சேர்ந்த தொலெமி (Ptolemy ) என்பவரால் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் அல்மாகெஸ்ட் ஆய்வு கட்டுரையில் முறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் குறிப்பாக, அப்போது அறியப்பட்ட ஐந்து கிரகங்களின் வலஞ்சுழி இயக்கங்கள் பற்றி விளக்கினார். இரண்டவதாக இது பூமியில் இருந்து மற்ற கிரகங்களின் வெளிப்படையான தூரங்களில் உள்ள மாற்றங்களை விளக்கினார். இது அப்பல்லோனியஸ் ஆஃப் பெர்கா என்பவரால் வளர்ச்சி அடைந்திருந்தாலும், தொலெமிக்கு பிறகு தொலெமி இயக்கம் என அழைக்கப்பட்டது.
எபி வட்ட இயக்கம் , அன்டிகிதீரா இயந்திரநுட்பத்தில் (Antikythera mechanism) பயன்படுத்தப்பட்டது. இந்த அன்டிகிதீரா இயந்திரநுட்பத்தில் என்பது, நான்கு பற்சக்கரங்கள் உதவியுடன் சந்திரனின் நிலையை அறியப் பயன்படும் பண்டைய கிரேக்க வானியல் சாதனம் ஆகும். இதில், இரண்டு பற்சக்கரங்கள் விசித்திரமான முறையில் இணைக்கப்பட்டிருக்கும்.

எபி_வட்டம்_1

தொலெமி இயக்கத்தில் , ஒரு சிறிய வட்டம் ,ஒரு பெரிய வட்டத்தின் சுற்றளவு பாதையில் சுற்றி வரும்பொது கோள்கள் சிறிய வட்டத்தின் சுற்றளவு பாதையில் சுற்றி வருகின்றன இந்த சிறிய வட்டம் எபி வட்டம்(epi cycles) ஆகும். இரண்டு வட்டங்களும் வலப்புறமாக சுற்றுகிறது (clock wise ) மற்றும் இவை சூரியனின் சுற்றுப்பாதைக்கு ஏறத்தாழ இணையாக உள்ளது. இவை புவியை மையமாக கொண்டு சுற்றுகிறது என்று கருதப்பட்ட போதிலும் புவி அதன் மையப்புள்ளியாக கொள்ளாமல் வேரு ஒரு மையப்புள்ளியை கொண்டு சுற்றுவாதக கருதப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எபி_வட்டம்&oldid=3889525" இலிருந்து மீள்விக்கப்பட்டது