என். கே. செந்தாமரை கண்ணன்
என். கே. செந்தாமரை கண்ணன் N. K. Senthamarai Kannan இந்தியக் காவல் பணி | |
---|---|
இந்தியக் காவல் பணி | |
பிறந்தயிடம் | தமிழ்நாடு |
பணிபுரிந்த பிரிவு | இந்தியா |
பணியிலிருந்த ஆண்டுகள் | 1989-முதல் |
Alma mater | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
என். கே. செந்தாமரை கண்ணன் (N. K. Senthamarai Kannan) என்பவர் இந்திய காவல்பணி அதிகாரி ஆவார்.
காவல் பணி
[தொகு]செந்தாமரை கண்ணன்[1] இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு காவல்துறை ஆணையாளராவார். இந்திய காவல் சேவையில் காவல் துறை பொது ஆய்வாளராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.[2][3][4] திருப்பூர் நகரத்தின் முதலாவது காவல் ஆணையாளர் என்ற சிறப்பு உரியவராக அறியப்படுகிறார்.[5][6] கே.விஜயகுமாரின் தலைமையில் சந்தனக் கடத்தல் குற்றவாளியான வீரப்பனை சுட்டுவீழ்த்த முயற்சித்த கோகூன் நடவடிக்கையில் உளவுத்துறையின் தலைமை தாங்கியதோடு சிறப்பு பணிக்குழு உளவாளியாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[2][3] இவர் மேற்கொண்ட உளவு நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் 2016 ஆம் ஆண்டு வீரப்பன் கொலை திரைப்படம் அமைந்துள்ளது.[7][8]
கண்ணன் 1997-ஆம் ஆண்டு தொகுதி இந்திய காவல்துறை சேவை அதிகாரி ஆவார். ஆனால் 1989 ஆம் ஆண்டில் துணை காவல்துறை கண்காணிப்பாளராக மாநில காவல்துறைப் பணியில் நுழைந்தார். பின்னர் 2003 ஆம் ஆண்டில் இந்திய காவல் துறை அதிகாரியாக உயர்ந்தார்.[6]
கல்வி
[தொகு]செந்தாமரை கண்ணன் அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். பின்னர் 1985 முதல் அதே கல்லூரியில் பொருளாதார உதவி பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1989இல் தமிழ்நாடு மாநில காவல்துறை சேவையில் தேர்வாகி பணியில் சேரும் வரை அங்கு பணியாற்றினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ NA, NA (2011). NEWS. News.
- ↑ 2.0 2.1 "New IG assumes charge - The Hindu".
- ↑ 3.0 3.1 "The spy who spiked Veerappan". The Times of India.
- ↑ "Abducted 4-year-old traced to AP". The New Indian Express.
- ↑ "N.K Senthamarai Kannan SPS/IPS,promoted as IG of Police,in Tamil Nadu Government". Archived from the original on 2016-02-04. பார்க்கப்பட்ட நாள் 2021-05-17.
- ↑ 6.0 6.1 Staff Reporter. "Chief Minister declares open police commissionerate in Tirupur". The Hindu.
- ↑ "Meet Senthamaraikannan, the supercop Shivarajkumar plays in Killing Veerappan". The News Minute.
- ↑ "The end of Veerappan".