என். எஸ். மாதவன்
தோற்றம்
என். எஸ். மாதவன் என்பவர் முன்னணி மலையாள இலக்கியவாதிகளில் ஒருவர். இவர் எழுதும் புதினங்கள், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் ஆகியன பிரபலமாக அறியப்படுகின்றன.
இளமைக் காலம்
[தொகு]மாதவன், எறணாக்குளத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்தார். எறணாக்குளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பொருளியல் படித்தார்.[1] பின்னர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத்தில் பொருளியில் முதுகலை பயின்றார். மலையாள இலக்கிய நாளேடான மாத்ருபூமி நடத்திய போட்டியில், சிசு என்ற தலைப்பில் சிறுகதை எழுதி முதற்பரிசை வென்றார். 1975 ஆம் ஆண்டில், இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து பீகாரில் பணியாற்றினார்.
படைப்புகள்
[தொகு]- சூளைமேட்டிலே சவங்கள்
- திருத்
- ஹிகுய்தா (கொலம்பிய விளையாட்டு வீரர் பெயர்)
- பற்யயா கதைகள்
- நீலவிழி
- ரண்டு நாடகங்கள் (நாடகம்)
- வான்மரங்கள் வீழும்போள்
விருதுகள்
[தொகு]- பத்மப்பிரபா விருது - 2010
- கேரளசாகித்திய அக்காதமி விருது - ஹிக்விற்ற
- முட்டத்துவர்க்கி விருது
- ஓடக்குழல் விருது
- வி.பி. சிவகுமார் ஸ்மாரக கேளி விருது
- பத்மராஜன் விருது
- கதா ப்ரைஸ் - தில்லி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Author Details". 2017-08-19. Retrieved 2017-08-19.
இணைப்புகள்
[தொகு]- ஆஃப்டர்வேர்டு (ஆங்கில மொழிபெயர்ப்பு)
- த கிரை (ஆங்கில மொழிபெயர்ப்பு)
- கனகம் (ஆங்கில மொழிபெயர்ப்பு)
- அம்மா (ஆங்கில மொழிபெயர்ப்பு)
- இவரைப் பற்றி பரணிடப்பட்டது 2016-06-06 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)