என்றி டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுழே கோர் ஓயி என்றி டைSze-Hoi Henry Tye ( வ்பிறப்பு:1947) ஒரு சீன - அமெரிக்க அண்டவியலாளரும் கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். இவர் சார்புக் கிளை இயக்கம் அண்ட உப்புதலை ஏற்படுத்தக்கூடும் என்ற்ரர். மீச் சரக் கோட்பாடு, அடிப்படைத் துகள் இயற்பியல் குறித்து அவரது பணி குறித்தும் பல விவரங்களை முன்மொழிந்தது. அவர் தனது தொடக்க, இடைநிலைப் பள்ளிக் கல்வியை ஆங்காங்கில் பெற்றார். இவர் இலா சாலே கல்லூரியில் பட்டம் பெற்றார். கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து இளம் அறிவியல் பட்டமும் , மாசசூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் பிரான்சிசு லோவின் கீழ் இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார். அவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஒரேசொ ஒயிட் தகைமைப் பேராசிரியராகவும் , அமெரிக்க இயற்பியல் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[1] 2011 ஆம் ஆண்டில் ஆங்காங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், 2011முதல் 2016 வரை இக்குசுத்து ஜாக்கி கழக உயர் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.[2]

கியா துவாலி உடன் இணைந்து 1998 ஆம் ஆண்டில் கிளை உப்புதல் பற்றிய எண்ணக்கருவை இவர் பரிந்துரைத்தார். இதில், முற்றொருமித்த கிளைகளுக்கு இடையில் மீச் சமச்சீர்மை தரும் மென் விசைகளால் உப்புதல் எழுகிறது.[3] இது கிளைகலையும் எதிர்க்கிளைகளையும் அடிப்படையாகக் கொண்ட இயக்கமாகும். இந்த முன்மொழிவின் சற்றே மாறுபட்ட எண்ண்க்கருவே பின்னர் சமித் கச்ரு, இன்னும்பிற ஒத்துழைப்பாளர்களால் பருநிலைச் சரக் கோட்பாட்டு அடிப்படையில் முன்வைக்கப்பட்டது.[4][5] கார்னலில் உள்ள தனது ஆராய்ச்சிக் குழுவுடன் இணைந்து இவர் கிளை உப்புதல் குறித்த பல விவரங்களை உருவாக்கினார். அண்டச் சரங்களில் உள்ள ஆர்வத்தின் மறுமலர்ச்சிக்கு அவர் பொறுப்பேற்றார். கிளை நுண்ணுயிர் அழிவு காரணமாக கிளை உப்புதலின் முடிவில் அண்ட மீச் சரங்கள் ஆக்கப்படுகின்றன. கிளை உப்புதலின் விவரங்களைத் தவிர , சர நிலக்கிடப்பு, குவைய அண்டவியல் தொடர்பான சிக்கல்களில் அவர் தனது ஒத்துழைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

ஆலன் குத் தனது புத்தகமான உப்புதல் அண்டம் என்ற புத்தகத்தில், என்றி டையின் செல்வாக்கின் காரணமாக அண்ட உப்புதல் முதல் எண்ணக்கருவுக்கு வழிவகுத்த சிக்கல்களைப் பற்றி சிந்திக்க அவர் எவ்வாறு வழிநடத்தப்பட்டார் என்பதைக் கூறுகிறார்.[6] அப்போது இருவரும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரிகளாக இருந்தனர். குத் தனது வரலாற்று உப்புதல் முன்னேற்றத்தைக் கொண்டு வந்த நேரத்தில் டை 1979 இல் ஆறு வாரங்களுக்கு சீனாவுக்குச் சென்றார். " அவர் சீனாவுக்குச் செல்லாமல் இருந்திருந்தால் , என்றி நிச்சயமாக முதல் உப்புதல் கட்டுரையின் இணை ஆசிரியராக இருந்திருப்பார் " என்று குத் கூறினார்.[7]

அவரது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் டை கவாய், இலெவெல்லனுடன் பெர்மியானியச் சரப் படிமங்களை உருவாக்குதல் , பகுதி மீச்சரம், பாரிய ஒன்றிய சரப் படிமங்கள், பிரேன் அண்டம் போன்ற பல முதன்மை எண்ணக்கருக்களில் ஈடுபட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

என்றி டை பிக் குவூன் யூங்கை மணந்தார். அவரது மகள் கே டை ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Henry S.-H. Tye". Cornell University. Archived from the original on 2006-10-25. பார்க்கப்பட்ட நாள் 2006-11-24.
  2. "Tye Appointed head of IAS".
  3. Dvali, Gia; Tye, S.-H.Henry (1999). "Brane inflation". Physics Letters B (Elsevier BV) 450 (1–3): 72–82. doi:10.1016/s0370-2693(99)00132-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0370-2693. Bibcode: 1999PhLB..450...72D. 
  4. Burgess, Clifford P; Majumdar, Mahbub; Nolte, Detlef; Quevedo, Fernando; Rajesh, Govindan; Zhang, Ren-Jie (2001-07-30). "The inflationary brane-antibrane universe". Journal of High Energy Physics 2001 (7): 047. doi:10.1088/1126-6708/2001/07/047. பன்னாட்டுத் தர தொடர் எண்:1029-8479. Bibcode: 2001JHEP...07..047B. 
  5. Kachru, Shamit; Kallosh, Renata; Linde, Andrei; Maldacena, Juan; McAllister, Liam; Trivedi, Sandip P (2003-10-30). "Towards inflation in string theory". Journal of Cosmology and Astroparticle Physics 2003 (10): 013. doi:10.1088/1475-7516/2003/10/013. பன்னாட்டுத் தர தொடர் எண்:1475-7516. Bibcode: 2003JCAP...10..013K. 
  6. Guth, Alan H. (1997). The Inflationary Universe. Reading, Massachusetts: Perseus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-201-14942-7. https://archive.org/details/inflationaryuniv0000guth. 
  7. Steve Nadis.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_டை&oldid=3776609" இலிருந்து மீள்விக்கப்பட்டது