எனிக்மா (இசைத் தொகுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனிக்மா என்றழைக்கப்பட்ட குழுவின் இசைத் தொகுப்புக்கள் பிரபல இசையமைப்பாளர்களான மைக்கேல் கிரெது இவர்தம் மனைவி சாண்ரா கிரெது மற்றும் இவரது நண்பர்களான டேவிட் பேர்ஸ்டீன்,பிராங் பீட்டர்சன் போன்றவர்களின் கூட்டு முயற்சியில் 1990 களில் வெளிவந்தது.இதன் இசை வடிவத்தினையும் தயாரிப்பு நிர்வாகங்களினையும் மைகல் கிரெதுவும் ஏற்றுக்கொண்டனர். சாண்ரா இவ்விசைத் தொகுப்புகளில் வரும் பல பாடல்களைப் பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.சாண்ரா குழு என்ற குழுவில் இருவரும் இதற்கு முந்தைய காலங்களில் பங்காற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.எனிக்மா இசைத்தொகுப்புகளில் இதுவரை ஜந்து இசைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன மேலும் ஆறாவது இசைத் தொகுப்பு 22,செப்டம்பர் மாசம் 2006 இல் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


வரலாறு[தொகு]

1970 ஆம் ஆண்டுகளிலிருந்து இசைத்தொகுப்புக்களை வெளியிட்டுவந்த மைக்கேல் கிரெது தனது வெகுநாள் கனவான புதிய வகியிலான இசையமைப்பொன்றினை 1990 ஆம் ஆண்டில் உருவாக்கத்திட்டமிட்டார் அத்திட்டன்பேரில் வெளிவந்த இவ்விசைத்தொகுப்பு இதுவரை காலங்களும் அவர் வெளியிட்டிருந்து இசைத்தொகுப்புக்களின் சாதனைகளை முறியடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசை[தொகு]

ஜரோப்பிய நடன இசை,உலக கலாச்சார இசை வடிவங்கள் மற்றும் புதிய கால இசை போன்ற பல வகைகளின் கலவைகளினால் உருவாக்கப்பெற்ற எனிக்மா இசைத்தொகுப்பு உலகின் பல பாகங்களில் உள்ள மக்களாலும் ரசித்துக் கேட்கப்பட்டது பல விருதுகளையும் அள்ளிச் சென்றது இவ்விசைத்தொகுப்புகள்.

எனிக்மா இசைத்தொகுப்பின் தாக்கம்[தொகு]

எனிக்மா இசைத்தொகுப்புகளின் பல பாடல்கள் பலதரப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள்,திரைப்படங்கள் மற்றும் அதன் முடிவுகளின் பயன்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 • "Age of Loneliness" தமிழ்த் திரைப்படமான பாட்ஷா ரகுவரன் வந்து செல்லும் காட்சிகளில் இப்பாடலின் ஆரம்ப இசையினைக் கேட்கலாம்.
 • "Beyond the Invisible" தொலைக்காட்சித் தொடரான, La Femme Nikita.
 • "Return to Innocence" தொலைக்காட்சித் தொடரான, The Outer Limits.
 • "Return to Innocence" திரைப்பட முடிவில், Man of the House.
 • "Return to Innocence" and "Sadeness (Part I)" திரைப்படத்தில், Exit to Eden.
 • "Return to Innocence" தொலைக்காட்சித் தொடரான, My So-Called Life.
 • "Return to Innocence" தொலைக்காட்சித் தொடரான, Cold Case (Episode Santuary (2006)).
 • "Sadeness (Part I)" திரைப்படத்தில், Boxing Helena.
 • "Sadeness (Part I)" திரைப்படத்தில், Charlie's Angels.
 • "Sadeness (Part I)" விளம்பரத்தில் 1492: Conquest of Paradise.
 • "Principles of Lust" திரைப்படத்தில், Single White Female.
 • "Carly's Song", "Carly's Loneliness" and "Principles of Lust" திரைப்படத்தில், Sliver.
 • "The Eyes of Truth" விளம்பரத்தில் The Matrix மற்றும் The Long Kiss Goodnight.
 • "I Love You ... I'll Kill You" திரைப்படத்தில், Money Talks.
 • "Smell of Desire" விளம்பரத்தில் the movie Bounce.
 • "Sadeness (Part I) தொலைக்காட்சித் தொடரான Chappelle's Show.
 • "Gravity Of Love" விளம்பரத்தில் The Scorpion King.
 • "Return to Innocence" ,Virgin Atlantic மற்றும் பல விளம்பரங்களில்

எனிக்மா இசைத் தொகுப்புகள்[தொகு]

 • எம்.சி.எம்.எக்ஸ்.சி.எ.டி (1990)
 • த க்ரோஸ் ஆப் சேஞ்சஸ் (1994)
 • லெ ரோய் எஸ்ட் மோர்ட் விவே லெ ரோய் (1996)
 • த ஸ்கிரீன் பிகைண்ட் த மிரர் (2000)
 • வோயேயர் (2003)
 • எ போஸ்டெரியோரி (2006)

பாடல்கள்[தொகு]

 • "Sadeness (பாகம் I)" (1990)
 • "Mea Culpa (பாகம் II)" (1990)
 • "Principles of Lust" (1991)
 • "The Rivers of Belief" (1991)
 • "Carly's Song" (1993)
 • "Return to Innocence" (1993)
 • "The Eyes of Truth" (1994)
 • "Age of Loneliness" (1994)
 • "Out from the Deep" (1994)
 • "Beyond the Invisible" (1996)
 • "T.N.T. for the Brain" (1997)
 • "Gravity of Love" (1999)
 • "Push the Limits" (2000)
 • "Turn Around" (2001)
 • "Voyageur" (2003)
 • "Following the Sun" (2003)
 • "Boum-Boum" (2004)
 • "Hello and Welcome" (2006)
 • "Goodbye Milky Way" (2006)


வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எனிக்மா_(இசைத்_தொகுப்பு)&oldid=1344100" இலிருந்து மீள்விக்கப்பட்டது