எத்தில் வினைல் ஈதர்
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஈதாக்சியெத்திலீன் | |
வேறு பெயர்கள்
ஈதாக்சியெத்திலீன்
| |
இனங்காட்டிகள் | |
109-92-2 | |
ChEMBL | ChEMBL116745 |
ChemSpider | 7732 |
EC number | 203-718-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8023 |
வே.ந.வி.ப எண் | KO0710000 |
SMILES
| |
UNII | 6235C9592H |
UN number | 1302 |
பண்புகள் | |
C4H8O | |
வாய்ப்பாட்டு எடை | 72.11 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.7589 |
உருகுநிலை | |
கொதிநிலை | 33 °C (91 °F; 306 K) |
8.3 கி/லி, 15°செல்சியசில் | |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H225, H319, H335, H412 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P273, P280, P303+361+353, P304+340, P305+351+338 | |
Autoignition
temperature |
202 °C (396 °F; 475 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
எத்தில் வினைல் ஈதர் (Ethyl vinyl ether) CH3CH2OCH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஈனால் ஈதர் வகை சேர்மங்களில் எளிய தொடக்கச் சேர்மமான இது அறை வெப்பநிலையில் நீர்மமாக காணப்படுகிறது. செயற்கை கட்டுறுப்பாகவும் ஓர் ஒருமமாகவும் எத்தில் வினைல் ஈதர் பயன்படுத்தப்படுகிறது. [1]
தயாரிப்பு[தொகு]
ஒரு காரத்தின் முன்னிலையில் அசிட்டைலீனும் எத்தனாலும் சேர்ந்து வினைபுரிந்தால் எத்தில் வினைல் ஈதர் உற்பத்தியாகிறது.
வினைகள்[தொகு]
எத்தில் வினைல் ஈதர் மூலக்கூறின் ஆல்க்கீன் பகுதி பல வினைகளில் பயன்படுகிறது. பாலிவினைல் ஈதரை உருவாக்கும் பலபடியாக்கல் வினை இதற்கு எடுத்துக்காட்டாகும். போரான் முப்புளோரைடு போன்ற இலூயிசு அமிலங்கள் இப்பலபடியாக்கல் வினையில் வினை தொடக்கப் பொருளாக பயன்படுகின்றன. [2] பல்வேறு வகையான கரிமத் தொகுப்பு வினைகளிலும் எத்தில் வினைல் ஈதர் பங்கேற்கிறது. [3] வினையூக்க அளவு அமிலங்களுடன் எத்தில் வினைல் ஈதர் ஆல்ககால்களுடன் சேர்க்கப்பட்டு கலப்பு அசிட்டால் சேர்மத்தைக் கொடுக்கிறது.
- EtOCH=CH2 + ROH → EtOCH(OR)CH3
இந்த ஆல்ககால் பாதுகாப்பு வினை ஈரைதரோபிரானின் நடத்தையை ஒத்ததாக உள்ளது. எத்தில் வினைல் ஈதர் [4+2] வளையக் கூட்டு வினைகளிலும் பங்கேற்கிறது. பியூட்டைல் இலித்தியம் சேர்மத்துடன் புரோட்டான் நீக்க வினையில் ஈடுபட்டு அசிட்டைல் எதிர்மின் அயனிக்கு சமமான அயனியை அளிக்கிறது:
- EtOCH=CH2 + BuLi → EtOC(Li)=CH2 + BuH
நச்சுத்தன்மை[தொகு]
வினைல் ஈதர்கள் உள்ளிழுக்கும் மயக்க மருந்துகளாகப் பயன்படுத்தப்படுவதால், இவற்றின் நச்சுத்தன்மை பெரிதும் ஆராயப்பட்டது. நெருங்கிய தொடர்புடைய மெத்தில் வினைல் ஈதரின் உயிர் கொல்லும் அளவு வாய்வழியாக எலிகளுக்கு கொடுக்கப்பட்டபோது 4 கி/கி.கி என்ற அளவுக்கும் அதிகமாகும். [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Ernst Hofmann, Hans‐Joachim Klimisch, René Backes, Regina Vogelsang, Lothar Franz, Robert Feuerhake (2005), "Vinyl Ethers", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a27_435.pubCS1 maint: multiple names: authors list (link)
- ↑ Gerd Schröder (2005), "Poly(Vinyl Ethers)", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a22_011
- ↑ Percy S. Manchand (2001). "Ethyl Vinyl Ether". EEROS. doi:10.1002/047084289X.re125. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471936235.