எண்ணெய் தொழில் பாதுகாப்பு இயக்குநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்ணெய் தொழில் பாதுகாப்பு இயக்குநரகம் (Oil Industry Safety Directorate) இந்தியாவில் செயல்பட்டுவரும் ஒரு தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவாகும். பல்வேறு துறைகளின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட மையக் குழுவுடன் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், எண்ணெய் / எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட சட்ட மற்றும் ஆலோசனைக் குழுக்களின் தலைவர்கள் அடங்கிய உச்ச அமைப்பாக இயக்குநரகம் செயல்படுகிறது. 1986 ஆம் ஆண்டு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இக்குழுவை நிறுவி இயக்குகிறது.[1][2][3] எண்ணெய் தொழிலுக்குரிய பாதுகாப்பு தரங்களை வகுத்தும், சுய ஒழுங்குமுறை நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளையும் எண்ணெய் தொழில் பாதுகாப்பு இயக்குநரகம் செயல்படுத்துகிறது.

முக்கியப் பொறுப்புகள்[தொகு]

  • தரப்படுத்தல்;
  • பேரிடர் மேலாண்மை திட்டத்தை உருவாக்குதல்;
  • விபத்து பகுப்பாய்வு;
  • பாதுகாப்பு செயல்திறனை மதிப்பீடு செய்தல்.[1]

எண்ணெய் தொழிற்சாலைகளை நிறுவுதலுக்கான பல்வேறு வசதிகளையும் பாதுகாப்பான தூரங்களைக் கண்காணிப்பதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் எண்ணெய் தொழில் பாதுகாப்பு இயக்குநரகம் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் புதிய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு குப்பி ஆலைகள் அனைத்தும் இயக்குநரகத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இயக்குநகரத்தின் ஒப்புதலுக்குப் பிறகுதான் திரவ பெட்ரோலிய தொழிற்சாலைகளைத் தொடங்க முடியும். பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பெட்ரோலிய நிறுவல்கள் தொடர்பான தரங்களின் பாதுகாப்பான செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களையும் இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]