எண்ணங்களை மேம்படுத்துங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எண்ணங்களை மேம்படுத்துங்கள் என்னும் புத்தகத்தை அமெரிக்க எழுத்தாளர் டாக்டர் எம்.ஆர்.காப்மேயர் என்பவர் எழுதியுள்ளார். இந்நூலில் 80 அத்தியாங்கள் உள்ளன. இதில் வெற்றியும் மகிழ்ச்சியும் உள்ளார்ந்த அமைதியையும் வழங்கக்கூடிய 80 வழிமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. இந்நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் பி.சி. கணேசன் ஆவார்.எண்ணங்களை மேலும் மேலும் உயா்த்த இந்த புத்தகம்

பெருமளவில் உதவும். சுயமாக சிந்திப்பதற்குத் துணையாகயிருக்கும்.

கருத்துக்கள்[தொகு]

ஒவ்வொரு சிறிய அத்தியாயமும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அறிமுகப்படுத்துகிறது. ஒரு கருத்தின் மீது சற்று வித்தியாசமான பார்வை செலுத்தப்பட்டு இருப்பதாகவும் கருதலாம். வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த கருத்துகளே இதில் இடம் பெற்று உள்ளன.ஒவ்வொரு அத்தியாயமும் அதற்கு முன் அத்தியாயத்துடனும் அல்லது அதைத் தொடரும் அத்தியாயத்துடனும் தொடர்பு கொண்டது அல்ல. இந்த புத்தகத்தில் உள்ள எந்தப் பகுதியினையும் நீங்கள் தனிதனியாகப் படிக்கலாம்.ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றியும் நீங்கள் தனிதனியாகச்பசி ந்திக்கலாம்.

முதலாம் வழிமுறை - உயரமாக நில்லுங்கள் என்பது ஆளுமையை உயர்த்திக்கொள்ளுங்தள் என்பதாகும். உடல் அளவில் மன அளவில் ஆன்மீக அளவில் என்ற முன்று நிலைகளில் உயரமாக நிற்கும் போது வாழ்க்கையில் ஏற்படும் சகலவற்றையும் சமாளிக்கின்ற தன்னம்பிக்கை திறமை நிதானம் ஆகிய பண்புகள் ஏற்பட்டு வாழ்க்கை பாதையில் கம்பீரமாக நடைபோட முடிகிறது. இரண்டாவது வழிமுறை பிரித்து வெற்றிபெறுங்கள் டாக்டர்.வில்லியம் ஆஸ்கர் சொல்லியுள்ள, ஒரு சமயத்தில் ஒரு நாள் வாழ்க்கை போதும்" என்கி்ன்ற கோட்பாட்டினை நாம் அனைவரும் அறிவோம். இன்றைய தினத்தை மட்டும் வாழக் கற்றுக் கொள்வோம். உடல், மனம், உணர்ச்சி ஆகியவற்றை திறமையாகப் பயன்படுத்தி, சுலபமாக, அமைதியாக, எடுத்துக்கொண்டே வேலைகளில் கவனம் செலுத்துகி்ன்ற மனப்பான்மை வந்துவிட்டால் வெற்றி.

  1. மேற் கோள்:

எண்ணங்களை மேம்படுத்துங்கள் எழுத்தாளர் டாக்டர் எம்.ஆர்.காப்மேயர் மொழிபெயர்த்தவர் பி.சி. கணேசன்

கண்ணதாசன் பதிப்பகம் சென்னை - 600 017. முப்பத்து எட்டாம் பதிப்பு டீசம்பா் 2015