உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் (Edwin H. Armstrong)
எப்.எம்.அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பம் பயன்பாடு
பிறப்பு(1890-12-18)திசம்பர் 18, 1890
ஜெல்ஜி, மாண்காட்டன், நியூயார்க் நகரம், யூ.எஸ்.ஏ[1]
இறப்புசனவரி 31, 1954(1954-01-31) (அகவை 63)
நியூயார்க் நகரம், யு.எஸ்.ஏ
கல்விகொலம்பியா பல்கலைக்கழகம்
பணிமின்பொறியியல், கண்டுபிடிப்பு
அறியப்படுவதுபண்பலை
வாழ்க்கைத்
துணை
எஸ்தர் மரியோன் (1922–1954; his death)
விருதுகள்IEEE பதக்கம் (1917)
எடிசன் விருது (1942)

எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் (டிசம்பர் 18, 1890 - ஜனவரி 31, 1954) இவர் அமெரிக்காவில் வாழ்ந்த மின்பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவர். ஒரு அமெரிக்க மின் பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர். இவர் வானொலி பயன்பாட்டின் வரலாற்றில் இவர் ஒலி பண்பேற்றம் மூலம் மறக்க முடியாதவர் ஆவார்.[2] இவர் உலகின் முதல் எப்.எம் ஒலிபரப்பிற்காக காப்புரிமை பெற்றார். இவரின் மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1941ஆம் ஆண்டு காப்புரிமை கிடைத்தது. அதன் பின் இரண்டாவது முறை மேம்பட்ட மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1933ஆம் ஆண்டும் காப்புரிமை பெற்றார். 1918ஆம் ஆண்டில் சூப்பர்ஹெடரோடைன்னை (Superheterodyne receiver) மேம்படுத்தினார். இவர் ஒரு வானொலி ஒலிபரப்பில் நவீன அதிர்வெண் பண்பலைபண்பேற்றம் (FM) கொண்டுவந்து புரட்சியை ஏற்படுத்தினார்.[3]

ஆர்ம்ஸ்ட்ராங் 1890ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் பிறந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தீட்டா ஜி பற்றிய பாடத்தை எடுத்துப்படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

இளமை[தொகு]

முதல் உலகப் போர் நடந்தபோது சமிக்ஞை பிரிவில் இருந்தபோது உள்ள படம்

இவர் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி, செல்சியா என்ற இடத்தில் பிறந்தார். இவரின் அப்பா பெயர் ஜான் அம்மாவின் பெயர் எமிலி ஆகும். இவரின் அப்பா ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் வேலை செய்தார்.

ஆரம்பகால பணி[தொகு]

அவர் கண்டுபிடித்த எப்.எம் பற்றிய வரைபடத்தின் தோற்றம்.(vol. 1 no. 1 1922.)

அவர் படித்த கொலம்பியா பல்கலைக்கழக்கத்திலேயே முதலில் பேராசிரியராகப் பணிபுரிந்தர்.[4] அதன் பின்பு முதல் உலகப்போரின் போது சமிக்ஞை அதிகாரியாக சேவை செய்தார்.[5]

எப்.எம் வானொலி[தொகு]

எப்.எம் வானொலியைக் கண்டுபிடித்த இவர் 1935ஆம் ஆண்டு நியூஜெர்ஸி மாநிலத்தில் ஒலிபரப்பு செய்தார். அதன் பின்னர் இவரின் தயாரிப்பைப் பல தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் அதற்கான உரிமைத்தொகையைத் தராமல் அலைக்கழித்தார்கள். இதனால் நீதிமன்றம் சென்றார், நிம்மதியை இழந்தார். நீதிமன்றத்தில் இவருக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. ஆனாலும் எப்.எம் என்பது பற்றி யாருக்கும் புரியவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

சொந்த வாழ்க்கை[தொகு]

1922ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேரின் மேக்லின் என்பவரை மணந்தார்.

தற்கொலை[தொகு]

நிதி நெருக்கடி அதிகமானதாலும், மன உளைச்சல் காரணமாகவும் தன் வேலைகளில் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டார். அதோடு மனைவி மேரின் மேக்லின் அவரின் தங்கையைப் பார்க்க வேறு குடியிருப்பிற்குச் சென்று விட்டார்.[5][6][7] 1954ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி அவர் குடியிருந்த பதின்மூன்றாம் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட்டார்.

குறிப்புகள்[தொகு]

 • Lessing, Lawrence (1956), Man of High Fidelity: Edwin Howard Armstrong, a biography, Philadelphia: Lippincott
 • Wu, Tim (2010), The Master Switch, New York: Alfred A. Knopf, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-26993-5
 • Lewis, Tom (1991), Empire of the air: the men who made radio, New York: Edward Burlingame Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-098119-9
 • Erickson, Don V. (1973), Armstrong's fight for FM broadcasting: one man vs big business and bureaucracy, University of Alabama Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8173-4818-2

மேற்கோள்[தொகு]

 1. Tsividis, Yannis (Spring 2002). "Edwin Armstrong: Pioneer of the Airwaves". Columbia Magazine. Living Legacies: Great Moments and Leading Figures in the History of Columbia University. New York: Columbia University. பார்க்கப்பட்ட நாள் December 12, 2010.
 2. Campbell, Richard; Christopher R. Martin; Bettina Fabos (2011). Media and Culture: An Introduction to Mass Communication, 8th Ed. MacMillan. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0312644655.
 3. "The Armstrong Patent". Radio Broadcast (Doubleday, Page, & Co.) 1 (1): 71–72. May 1922. http://books.google.com/books?id=VMcnAAAAYAAJ&pg=PA71. 
 4. Edwin Howard Armstrong (August 2, 1917). "Operating Features of the Audion". Annals of the New York Academy of Sciences 27 (1): 215–243. doi:10.1111/j.1749-6632.1916.tb55188.x. http://www3.interscience.wiley.com/journal/119811389/abstract?CRETRY=1&SRETRY=0. [தொடர்பிழந்த இணைப்பு]
 5. 5.0 5.1 "Armstrong, FM Inventor, Dies In Leap From East Side Suite". The New York Times: p. 1. February 2, 1954. "Maj. Edwin H. Armstrong, whose inventions provided much of the basis for modern broadcasting, was found dead yesterday morning on a third-floor balcony of River House, 435 East Fifty-second Street. The 63-year-old electrical engineer had plunged from a window of his luxurious thirteenth-floor apartment, apparently late Sunday evening or during the night." 
 6. Ken Burns' documentary film, "Empire of the Air"
 7. Stashower, Daniel (2002), The Boy Genius and the Mogul: the untold story of television, New York: Broadway Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0767907590, His health began to suffer and his behavior grew erratic. On one occasion he came to believe that someone had poisoned his food and insisted on having his stomach pumped. On another, his wife fled the house as Armstrong lashed out with a fireplace poker.