எட்வர்ட் டி போனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வர்டு டி போனோ
Edward de Bono
Edward de Bono on Channel 4 "Opinions".jpg
1994 இல் டி போனோ
பிறப்பு19 மே 1933 (1933-05-19) (அகவை 90)
மால்ட்டா

எட்வர்டு டி போனோ (Edward de Bono, பிறப்பு: 19 மே 1933) மால்டாவில் பிறந்த மருத்துவர், நூலாசிரியர், புதுப்புனைவர், ஆலோசகர் என்னும் பல பரிமாணங்களைக் கொண்டவர்.[1]

பயின்ற கல்வி[தொகு]

இவருடைய முழுப் பெயர் எட்வர்டு சார்லஸ் பிரான்சிஸ் பியூப்ளிஸ் டி போனோ ஆகும். மால்டாவில் உள்ள புனித எட்வர்ட் கல்லூரியில் கல்வி பயின்றார். இங்கிலாந்து ஆக்சுபோர்டில் உடல்நூல், மனவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். கேம்பிரிச் டிரினிட்டி கல்லூரியில் மருத்துவ ஆய்வுப் பட்டம் பெற்றார். ராயல் மெல்போர்ன் தொழில்நுட்பக் கழகத்திலும் டண்டீ பல்கலைக்கழகத்திலும் ஆய்வுப்பட்டங்களைப் பெற்றார்.

பக்கவாட்டு சிந்தனை (lateral thinking) என்னும் கருதுகோளைப் புதிதாகப் புனைந்தவர். புதிய கோணத்தில் சிந்தித்தல், ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்தல், அவற்றின் அடிப்படையில் திறமைகளை வளர்த்தெடுத்தல் போன்றவற்றைப் போதிப்பதில் வல்லுநராகத் திகழ்கிறார். உலகத்தில் உள்ள மிகப் பெரிய குழுமங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ஆப்பிள், பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.

எட்வர்ட் டி போனோ எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேல் உள்ளன. அவை நாற்பது மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டுள்ளன ஆக்சுபோர்டு கேம்பிரிட்ஜ் ஹார்வர்ட் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். உலக மனிதக் குலத்திற்குப் பங்களித்த அறிஞர்கள் 250 பேரில் போனோ சிறந்த இடத்தைப் பெற்று விளங்கி வருகிறார்.

மேற்கோள்[தொகு]

  1. "Birthday's today". The Telegraph. 19 May 2011. 11 ஜூன் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 May 2014 அன்று பார்க்கப்பட்டது. Dr Edward de Bono, lateral thinker, 78

மேலும் படித்தறிவதற்கு[தொகு]

  • Piers Dudgeon: Breaking Out of the Box: The Biography of Edward de Bono. London: Headline, 2001. ISBN 0-7472-7142-9

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?Print=1&id=505&ncat=18

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்ட்_டி_போனோ&oldid=3545630" இருந்து மீள்விக்கப்பட்டது