உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வர்டு கலென் (ட்விலைட்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வர்டு கலென்
டுவிலைட் கதை மாந்தர்
முதல் தோற்றம் டுவிலைட் (நாவல்)
இறுதித் தோற்றம் மிட்நைட் சன்
உருவாக்கியவர் இசுடீபனி மேயர்
வரைந்தவர்(கள்) ராபர்ட் பாட்டின்சன்
தகவல்
பிற பெயர்எட்வர்டு அந்தோணி மேசன்
வகைகாட்டேரி
மனிதன்
பால்ஆண்
தொழில்மாணவர்
துணைவர்(கள்)பெல்லா சுவான்
பிள்ளைகள்ரெனசுமீ கலென்

எட்வர்ட் கலென் (Edward Cullen ) என்பது இசுடீபனி மேயரின் துவிலைட் புத்தகத் தொடரில் வரும் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரம் டுவிலைட், நியூ மூன், எக்லிப்ஸ், பிரேக்கிங் டான் ஆகிய புதினங்களிலும், அவற்றுடன் தொடர்புடைய திரைப்படத் தழுவல்களிலும், எட்வர்டின் பார்வையில் இருந்து டுவிலைட்டின் நிகழ்வுகளை மீண்டும் சொல்லும் மிட்நைட் சன் புதினத்திலும் இடம்பெற்றுள்ளது. எட்வர்டு ஒரு தொலை நுண்ணுணர்வு இரத்தக் காட்டேரி வகையினைச் சேர்ந்தவர். இந்தத் தொடரின்படி பெல்லா சுவானை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்குத் தந்தையாகிறார். திரைப்படங்களில் எட்வர்டாக நடிகர் ராபர்ட் பாட்டின்சன் நடிக்கிறார்.

கருத்து மற்றும் உருவாக்கம்

[தொகு]

இந்தக் கதாப்பத்திரத்தை உருவாக்கியவரான இசுடெபனி மேயர், எட்வர்டின் கதாப்பாத்திரத்திரம் தனக்கு ஒரு கனவில் தோன்றியதாகவும் அதில் "சாரசரியான, அழகான, பிரகாசமான இரத்தக் காட்டேரியாக இருந்ததாகவும், காடுகளின் புல்வெளியில் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்ததாகவும் நினைவு கூர்ந்தார்". இந்தக் கனவில், இந்த இணை அவர்கள் ஒருவருக்கொருவர் காதலிப்பது குறித்தும் அதிலிருக்கும் சிரமங்களைப் பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தனர். இவர் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு எட்வர்டு எனப் பெயரிட்டார். காதல் நயமிக்கப் பெயராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஆனால் பல தசாப்தங்களாக பிரபலமடையாமல் போய்விட்டதற்காகவும் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.[1] ஜேன் அயரின் எட்வர்ட் ரோசெஸ்டர், பிரைட் அண்ட் ப்ரீஜுடைசின் படத்திலிருந்து ஃபிட்ஸ்விலியம் டார்சி மற்றும் அன் ஆஃப் கிரீன் கேபிள்ஸின் கில்பர்ட் பிளைத்-குறிப்பாக எட்வர்ட் கலனைப் போலவே தன்னை ஒரு "அசுரன்" என்று கருதும் எட்வர்ட் ராசெஸ்டர் ஆகிய மூன்று முன்னணிக் கதாப்பாத்திரங்களின் கலவையாக எட்வர்ட் இருப்பதாக மேயர் கூறுகிறார்.[2]

தோற்றங்கள்

[தொகு]

டுவிலைட்

[தொகு]

டுவிலைட்டில், எட்வர்ட் 17 வயதான பெல்லா சுவானைச் சந்திக்கிறார்.ஆனால் அவருடைய எண்ணங்களை இவரால் அறிந்துகொள்ள இயலவில்லை, மேலும் அவரது இரத்தமானது இவருக்கு மிகவும் இனிமையான மணத்தினைத் தருகிறது. [3] எட்வர்டுக்கு பெல்லா மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் அவளுடைய உயிரைக் காப்பாற்றிய பிறகு, அவர் மீது காதல் வருகிறது. எனவே, பெல்லாவிடம் தான் ஒரு காட்டேரி என்றும், பதினேழு வயது இளைஞனின் உடல் அமைப்பைக் கொண்டிருந்தாலும், உண்மையில் சூன் 20, 1901 அன்று பிறந்ததாகவும் ஒப்புக்கொள்கிறார். அவரது வளர்ப்புத் தந்தை கார்லைல் கலென், 1918 ஆம் ஆண்டு இல்லினாய்ஸின் சிகாகோவில் 1918 இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவலால் இவர் இறப்பதைத் தடுக்க, எட்வர்டின் தாயின் வேண்டுகோளின் பேரில் இவரை ஒரு காட்டேரியாக மாற்றினார்.

இருப்பினும், எட்வர்டு பெல்லாவை தன்னுடன் இருக்கக் கூடாது என்று தொடர்ந்து எச்சரிக்கிறார். ஏனெனில், அவர் தொடர்ந்து தன்னுடன் பழகினால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை எட்வர்டு உணர்ந்து கொள்கிறார். சைவக் காட்டேரிகளாக இருக்கும் கலன் குடும்பத்தினரைப் போலல்லாமல் ஜேம்சு பெல்லாவைக் கொல்ல முயற்சிக்கிறார். [4]

நியூ மூன்

[தொகு]

நியூ மூனில், பெல்லா தனது விரலை வெட்டிக் கொண்டு, தனது சகோதரர் ஜாஸ்பரால் தாக்கப்படும்போது, பெல்லாவின் பாதுகாப்பு குறித்து எட்வர்டின் பயம் தீவிரமடைகிறது. அவளைப் பாதுகாப்பதற்காக போலியாக தான் காதலிக்கவில்லை என்று கூறி,தன் குடும்பத்துடன் பிரிந்து செல்கிறான்.இதனால் பெல்லா கவலையில் உள்ளார். பெல்லா தற்கொலை செய்து கொண்டதாகத் தனது சகோதரி ரோசாலியிடமிருந்து தவறுதலாக அறிந்த பிறகு, எட்வர்டு இத்தாலியக் காட்டேரிகள் குழுவான வோல்டூரியை தன்னைக் கொல்லும்படி சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். தனது சகோதரி ஆலிசுடன் சேர்ந்து, பெல்லா இத்தாலிக்கு விரைந்து சென்று வோல்டூரி எட்வர்டை அழிக்கும் முன் அவரைத் தடுத்து நிறுத்துகிறார்.

எட்வர்டு தான் ஏன் அவரை விட்டுப் பிரிந்து சென்றார் என்பதை விளக்கி பெல்லாவிடம் மன்னிப்பு கேட்கிறார். பெல்லா, எட்வர்டை மன்னித்துவிடுகிறார்.பெல்லா, தன்னை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டால், அவளை தானே காட்டேரியாக மாற்ற எட்வர்டு ஒப்புக்கொள்கிறான். [5]

வரவேற்பு

[தொகு]

எம்டிவி மூவிசின் இலாரி கரோல் எட்வர்டையும் பெல்லாவையும் "ஒரு முழு தலைமுறைக்குமான காதல் கதையின் சின்னம்" என்று கூறினார். [6] அதே நேரத்தில் கிர்கசு, டுவிலைட்டில் எட்வர்டின் சித்தரிப்பினை "காதல்நயமிக்க நாயகர் " என்று மேற்கோள் காட்டினார். [7] ஹாலிவுட்டின் 10 சக்திவாய்ந்த காட்டேரிகள் பட்டியலில் எட்வர்ட் கலென் ஃபோர்ப்ஸ் பட்டியலில் #5 இடத்தைப் பிடித்தார். [8] எண்டர்டெயின்மென்ட் வீக்லி இந்தக் கதாப்பாத்திரத்தினை "கடந்த 20 ஆண்டுகளில் வந்த மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று" என்று அறிவித்தது. [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Story Behind Twilight". Stepheniemeyer.com. 11 February 2005. Archived from the original on 2008-07-30. Retrieved 2008-09-02.
  2. Purdon, Fiona (19 July 2008). "Stephenie Meyer's chaste vampires lure young readers". The Courier-Mail இம் மூலத்தில் இருந்து July 23, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080723045926/http://www.news.com.au/couriermail/story/0,23739,24028149-5003424,00.html. 
  3. Meyer, Stephenie. "1". Midnight Sun (PDF). Twilight series. Archived from the original (PDF) on 2009-10-26. Retrieved 2008-09-02.
  4. Meyer, Stephenie (October 5, 2005). Twilight. Park Avenue, New York City: Little, Brown. p. 498. ISBN 978-0-316-01584-4.
  5. Meyer, Stephenie (2006). New Moon. Twilight series. Park Avenue, New York: Little, Brown. p. 563. ISBN 978-0-316-16019-3.
  6. Larry Carroll (22 April 2008). "'Twilight' Stars Robert Pattinson, Kristen Stewart Turn Up The Heat To Prepare For Love Story". MTV.com. Archived from the original on April 22, 2008. Retrieved 2008-09-02.
  7. "Kirkus Review at B&N.com". B&N.com. Archived from the original on 2009-01-21. Retrieved 2009-01-21.
  8. Lauren Streib. "Hollywood's 10 Most Powerful Vampires". Forbes. Archived from the original on August 6, 2009. Retrieved 2009-08-16.
  9. Amanda Lynne. "Robert Pattinson's Edward Cullen named one of the greatest characters of the last 20 years". Gather.Com. Archived from the original on 2011-07-11. Retrieved 2010-07-16.

வெளி இணைப்புகள்

[தொகு]