எட்டியோபிளாஸ்ட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாசுடிட்டு வகைகள்

எட்டியோபிளாஸ்ட்டுகள் (Etioplast) என்பது ஒளிபடாத பசுங்கனிகங்களைக் குறிக்கின்றன. இவைகள் பொதுவாக இருள் நிறைந்த பகுதிகளில் வளரும் பூக்கும் தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பர்ம்களில்) காணப்படுகிறது. ஒரு தாவரமானது பலநாட்கள் ஒளி இல்லாத சூழலில் வளர்க்கப்படும் போது பொதுவாகக் காணப்படும் பசுங்கணிகங்கள் எட்டியோபிளாஸ்ட்டுகளாக மாறுகிறது.[1] எட்டியோபிளாஸ்ட்டுகள் என்பது செயல்படத்தக்க நிறமிகள் இல்லாத லியூக்கோபிளாஸ்ட்டுகள். இலைகளில் அதிக அளவு எட்டியோபிளாஸ்ட்டுகள் காணப்படுகிற பொழுது பச்சை நிறத்திற்குபதில் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

இந்தத்தாவர உடலங்கள் புரோலேமல்லார் உடலங்களைக் கொண்டுள்ளது. இவைகள் சவ்வினால் தொகுக்கப்பட்டுள்ள பாதி துகள்களான பின்னல் போன்ற கிளைத்த குழல் போன்ற அமைப்புகள் இவைகள் பச்சைய உற்பத்திக்கான முன்னோடிகள். இந்த புரோலேமல்லார் உடலங்கள் பெருக்கல் மடங்கில் அமைந்துள்ளது.

இவைகள் ஒளி உள்ள சூழலுக்கு மாறுகிற பொழுது சைட்டோகைனின் ஹார்மோன் உற்பத்தி மூலம் பச்சைய உற்பத்தி தூண்டப்பட்டு பசுங்கணிகமாக மாற்றமடைகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் தைலகாய்டுகளும் மற்றும் கிரானாக்களும் புரோலேமல்லார் உடலங்களிருந்து உருவாகிறது.


மேற்கோள்[தொகு]

  1. Heebak Choi, Taegyu Yi, Sun-Hwa Ha (June 17, 2021). "Diversity of Plastid Types and Their Interconversions". Frontiers in Plant Science 12: 692024. doi:10.3389/fpls.2021.692024. பப்மெட்:34220916. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டியோபிளாஸ்ட்டுகள்&oldid=3522676" இலிருந்து மீள்விக்கப்பட்டது