எச்ஆர் 8799

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச்ஆர் 8799 விண்மீன் (நடுவில்), இதன் கோள்கள்: எச்ஆர் 8799d, எச்ஆர் 8799c, எச்ஆர் 8799b

எச்ஆர் 8799 (HR 8799) என்பது பூமியில் இருந்து 129 ஒளியாண்டுகள் தூரத்தில் பெகாசசு என்ற விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள ஓர் இளம் (~60 மில்லியன் ஆண்டுகள் பழமையானது) விண்மீன் ஆகும். இது சூரியனை விட 1.5 மடங்கு எடையுடையதும், 4.9 மடங்கு ஒளிச்செறிவுடையதும் ஆகும்.

கோள்களின் தொகுதி[தொகு]

நவம்பர் 2008 இல், இவ்விண்மீனைச் சுற்றி வரும் மூன்று கோள்களை ஹவாயில் பொருத்தப்பட்டுள்ள ஜெமினி தொலைநோக்கிகளூடாகத் தாம் அவதானித்துள்ளதாக கனடாவின் வானியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்[1][2]. d, c, b என அழைக்கப்படும் இக்கோள்களின் சுற்றுவட்ட ஆரைகள் முறையே சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றிலும் பார்க்க 2.5 மடங்கு பெரியதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்ஆர்_8799&oldid=3714691" இருந்து மீள்விக்கப்பட்டது