எசெனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசெனைட்டு (Esseneite) என்பது (CaFeAlSiO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். மிகவும் அரிய வகை பைராக்சின் தொகுதி வகைக் கனிமமான இக்கனிமத்தில் பெர்ரிக் இரும்பு பெரும்பான்மையாக உள்ளது. பெர்ரிக் இரும்பு ஒத்த மற்ற தாவிசைட்டு, கிராசுமானைட்டு மற்றும் குசிரோயிட்டு போன்ற பைராக்சின் தொகுதி வகை கனிமங்களின் சார்பாக இக்கனிமம் நிற்கிறது. பரலவா என்று அழைக்கப்படும் வெப்ப உருமாற்ற பாறைகளில் இவ்வுருமாற்ற கனிமம் உருவாகிறது. பொதுவாக நிலக்கரி எரிந்து படிவுப் பாறைகள் மீது உருகி இவை உருவாகின்றன. மனித இனச்சூழலின் நிலக்கரி நெருப்புத் தளங்கள் மற்றும் இயற்கை என்ற இருமூலங்களிலும் எசெனைட்டு காணப்படுகிறது. [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cosca, M.A., and Peacor, D.R., 1987: Chemistry and strucfure of esseneite (CaFe3+AlSiO6), a new pyroxene produced by pyrometamorphism. American Mineralogist 72, 148-156
  2. "Esseneite: Esseneite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசெனைட்டு&oldid=2396221" இலிருந்து மீள்விக்கப்பட்டது