எசு/2012 பி 1
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியால் கண்டறியப்பட்ட படிமம் எசு/2012 பி 1 (P5 ஆகக் காட்டப்பட்டுள்ளது). |
|
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | சோவால்ட்டர் முதலானோர் |
கண்டுபிடிப்பு நாள் |
|
கண்டுபிடிப்பு முறை | புகைப்படம் |
சுற்றுப்பாதையின் சராசரி ஆரம் | 42,000 km (26,000 mi) ± 2,000 km (1,200 mi) |
மையத்தொலைத்தகவு | ≈ 0 |
சுற்றுப்பாதை வேகம் | 20.2 ± 0.1 நாட்கள் |
சாய்வு | ≈ 0 |
இது எதன் துணைக்கோள் | புளூட்டோ |
சிறப்பியல்பு
| |
சராசரி ஆரம் | 5–12.5 km (3–8 mi)[1] |
எசு/2012 (134340) 1 (S/2012 (134340) 1) வேறுபெயர்கள் எசு/2012 பி 1 (S/2012 P 1) அல்லது பி5 (P5) என்பது புளூட்டோ என்ற குறுங்கோளின் இயற்கைத் துணைக்கோள் (நிலவு) ஆகும். இது புதிதாகக் கண்டறியப்பட்டு 2012 சூலை 11 இல் அறிவிக்கப்பட்டது. இது புளூட்டோவின் ஐந்தாவது துணைக்கோள். இதன் நான்காவது துணைக்கோள் எசு/2011 பி1 கண்டறியப்பட்டு ஒரு ஆண்டின் பின் இது கண்டறியப்பட்டுள்ளது.
கண்டுபிடிப்பு
[தொகு]இத்துணைக்கோள் கடந்த 2012 சூன் 26 முதல் சூலை 9 வரையான காலப்பகுதியில் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டிருந்த வைட்பீல்ட் புகைப்படக்கருவி 3 இன் மூலம் பிடிக்கப்பட்ட ஒன்பது தொகுதி படிமங்களின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.[2] இக்கண்டுபிடிப்பின் மூலம் அடையப்பட்டுள்ள புதிய தரவுகள் புளூட்டோ பற்றிய பல தகவல்களை தரும் என நம்பப்படுகின்றது.
பௌதீக இயல்புகள்
[தொகு]இத் துணைக்கோளின் விட்டம் 10-25 கிலோமீட்டர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.[3][4] இப்பெறுமானங்கள் துணைக்கோளின் மேல் கீழ் எல்லைகளில் முறையே 0.35 மற்றும் 0.04 கணிப்புள்ள வெண் எகிர்சிதறல்களை அனுப்பிப் பெற்றுக்கொண்ட தோற்றளவுகளாகும்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Ray Sanders (11 July 2012). "Hubble Space Telescope detects fifth moon of Pluto". Phys.org. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
- ↑ Rob Preece (11 July 2012). "A cosmic discovery: Astronomers using NASA's Hubble Space Telescope find fifth moon orbiting Pluto". Daily Mail. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
- ↑ "NewsCenter - Hubble Discovers a Fifth Moon Orbiting Pluto (07/11/2012) - The Full Story". HubbleSite. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
- ↑ "BBC News - Hubble discovers new Pluto moon". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.