ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வி. லெட்சுமிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வி.லெட்சுமிபுரம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வி.லெட்சுமிபுரம் இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் சரகத்திற்குட்பட்ட வி.லெட்சுமிபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது இந்நடுநிலைப் பள்ளி.

நிர்வாகம்[தொகு]

பள்ளியானது தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது. தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா சீருடை,காலணி, புத்தகம், புத்தகப்பை, கணிதப்பெட்டி, கலர் பென்சில், பாடக்குறிப்பேடு ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

குடியரசு நாள் கொண்டாட்டம்

கல்வி[தொகு]

முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவிக்கப் படுகிறது. அரங்கிராம்பட்டி, கொட்டையாபட்டி, நல்லிப்பட்டி மற்றும் ஆலமரம் போன்ற, அருகில் உள்ள கிராமத்திலிருந்து மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியில் சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்வழிக்கற்றல் முறையிலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள்[தொகு]

பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மூன்று ஆசிரியர்களும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்களும் கல்வி கற்பிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]