ஊத்தங்கரை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடரமண சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடரமண சுவாமி
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடரமண சுவாமி1

ஊத்தங்கரை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடரமண சுவாமி திருக்கோயில் என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நகரின் காந்தி சாலையில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.

பழமை[தொகு]

இக்கோயில் 2000களின் துவக்கத்தில் கட்டப்பட்டது என்றாலும் கூட சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பஜனைக் கோயில் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்துள்ளது. காலத்தின் மாற்றத்தாலும் இக்கோயிலில் இருந்த சிலைகள் காணாமல் போனதாலும் கோயில் முழுமையாக சிதிலமடைந்து விட்டமையால் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் தினமும் அதன் தினப்படிதாரர்களின் உதவியோடு சிறப்பு பூசைகள் நடைபெறுகிறன. ஒவ்வோர் சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் இக்கோயிலில் ஆண்டுதோறும் கீழ்க்கண்ட சிறப்பு விழாக்களும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பிற்பகலில் சுவாமி திரு வீதி உலாவும் நடைபெறும்.

1. விஜயதசமி விழா 2. ராம நவமி 3. புரட்டாசி மாத மூன்றாவது சனி 4. கருட சேவை 5. கிருஷ்ண ஜெயந்தி

மேற்கோள்கள்[தொகு]