உவர் நிலத்தில் மீன் வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உவர் நீர் மீன் வளர்ப்பு என்பது உவர் நீரில் மீன் வள்ர்ப்பது ஆகும். உவர் நீர் மீன் வளத்தில் உப்புத்தன்மையை தவிர நீர் மற்றும் மண்ணின் தன்மைகள் நன்னீர் மீன் வளத்தைப் போன்றே இருக்கும். உப்புத்தன்மை என்பது நீர் அளவில் கரையாமல் உள்ள உப்பாகும். இது கிராம் ஃ கிலோ கிராம் நீரினால் குறிப்பிடப்படும். பொதுவாக உவர்குளத்தில் 0.5மூ - 30மூ உப்புத்தன்மை இருக்கும். இந்த உப்புத்தன்மை குளத்தில் இருந்து கடல் தூரம் மற்றும் பருவகாலத்திற்கு தகுந்தவாறு இருக்கும்.

உப்புத்தன்மை ஏற்றவாறு தாவர மற்றும் விலங்கினங்கள் மாறுபடும். வினையியல் முறையினால் உப்புத்தன்மையில் உள்ள உணவை மாற்றி மீன்களுக்கு ஊட்டச்சத்தாக அமைகிறது. பெரும்பாலும் உவர் நீர் மீன் இனங்கள் இயற்கையிலே அதிக உப்பைத் தாங்கக் கூடிய திறன் உள்ளவை. பென்னேயிஸ் மோனோடான் வகை இறால் அதிகமாக உவர் நீரில் வளரக் கூடியது. உலகளாவிய சந்தைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது அதிக உப்பைத் தாங்கக் கூடியதாக இருந்தாலும் அதிகமாக இறப்புகள் மற்றும் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும். அதாவது உப்புத்தன்மை 10மூ குறைவாக இருந்தால் 15 - 30மூ உள்ள உப்புத்தன்மையில் பென்னேயிஸ் மோனோடான் நன்றாக வளரும். இது குறைவான உப்புத்தன்மையிலும் வளரும். ஆனால் நன்னீரில் 30 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது.

நன்னீரை விட உவர் நீரில்தான் அதிக மீன்களை வளர்க்கின்றனர். ஆனால் உவர் நீர் உற்பத்தியை விட நன்னீரின் உற்பத்திதான் அதிகம். இதற்கு முக்கிய காரணம் மீனுக்கு தேவையான உணவு, உயிரினங்கள் இல்லாததே ஆகும். ஆதலால் நிறைய உரங்கள் மற்றும் எருக்கள் இட வேண்டும். உவர் நீர், ஊனுண்ணிகளற்றி மீன்கள் மற்றும் இறால்களுக்கு கடலடி பாசி அடிப்படை உணவாகும். உவர் நீர் உரமிடுதல் முற்றிலும் மற்ற மீன் வளத்தை விட வேறுபட்டது. உவர் நீர் மீன் வளத்தில் நீர் உப்புத்தன்மை நிலைக்கேற்ப ஊட்டச்சத்து கிடைக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மீன் மற்றும் கடல்வள கையேடு – 2006