உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உழத்திப்பாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பள்ளு எனும் நூல்வகை தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இது மருதநில இலக்கியமாகும். பள்ளு இலக்கியங்கள், வேளாண்மை குடிகளான பள்ளர்களின் வாழ்க்கை பற்றியவை. தமிழில் பெருந்தொகையான பள்ளு இலக்கியங்கள் உள்ளன. தமிழ் சிற்றிலக்கிய வகைகளிலே, பள்ளு இலக்கியங்களே அதிகமாக உள்ளன எனக் கூறப்படுகின்றது.[1][2][3]

விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் காலத்தில் இயற்றப்பட்ட பள்ளு இலக்கியங்களிலிருந்து பள்ளர்களின் வாழ்க்கை நிலையை மட்டுமன்றி, அக்காலப் பொதுவான நாட்டு நிலைமைகளையும், பண்பாட்டுத் தகவல்களையும் கூடப் பெற்றுக்கொள்ளமுடிகின்றது. பல பள்ளு நூல்கள் இலக்கியச் சுவை மிக்கவை.

எடுத்துக்காட்டுகள்

[தொகு]

ஒரு பள்ளனுடைய இரண்டு மனைவியரில் ஒருத்தி சைவ சமயத்தவள், மற்றவள் வைணவ சமயத்தைச் சேர்ந்தவள். இவ்விருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் சிவனதும், திருமாலினதும் தலைகள் உருளுவதை முக்கூடற் பள்ளு ஆசிரியர் நகைச்சுவையுடன் எடுத்துக்கூறுகிறார்.

சுற்றிக்கட்ட ஒரு முழத்துண்டு மில்லாமல் புலித்
தோலை உடுத்தானுங்கள் சோதி அல்லோடி.

என்று இளைய மனைவியின் இறைவனாகிய சிவனை, உடுத்துவதற்கு ஒரு முழத்துண்டு கூட இல்லாமல் புலித்தோலை உடுத்திருக்கிறான் என்று ஏசுகிறாள். அதற்கு இளையவள் திருமால் மரவுரியும் சேலையும் கட்டிக்கொண்டது பற்றி இவ்வாறு சுட்டிக்காட்டுகிறாள்.

கற்றைச் சடைகட்டி மரவுரியும் சேலைதான் பண்டு
கட்டிக்கொண்டான் உங்கள் சங்குக் கையன் அல்லோடி

சிவன் நஞ்சுண்ட கதையைத் திரித்துப் பதிலடி கொடுக்கிறாள் மூத்தவள்.

நாட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல் வாரி
நஞ்சையுண்டான் உங்கள் நாதனல்லோடி

இளையவளிடமிருந்து பதில் வருகிறது இவ்வாறு:

மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கில்லாமல் வெறும்
மண்ணையுண்டான் உங்கள் முகில் வண்ணணல்லோடி.

பள்ளு நூல்கள்

[தொகு]
  • அகத்தியர் பள்ளு
  • இரும்புல்லிப் பள்ளு
  • எட்டையபுரப் பள்ளு
  • கங்காநாயக்கர் பள்ளு
  • கஞ்சமி செட்டியார் பள்ளு
  • கட்டி மகிபன் பள்ளு
  • கண்ணுடையம்மன் பள்ளு
  • கதிரை மலைப் பள்ளு
  • குருகூர்ப் பள்ளு
  • கொடுமாளூர்ப் பள்ளு
  • கோட்டூர் பள்ளு
  • சண்பகராமன் பள்ளு
  • சிவசயிலப் பள்ளு
  • சிவசைல பள்ளு
  • சீர்காழிப் பள்ளு
  • செண்பகராமன் பள்ளு
  • சேரூர் ஜமீன் பள்ளு
  • ஞானப் பள்ளு
  • தஞ்சைப் பள்ளு
  • தண்டிகைக் கனகராயன் பள்ளு
  • திருச்செந்தில் பள்ளு
  • திருமலை முருகன் பள்ளு
  • திருமலைப் பள்ளு
  • திருவாரூர்ப் பள்ளு
  • திருவிடைமருதூர்ப் பள்ளு
  • தென்காசைப் பள்ளு
  • பள்ளுப் பிரபந்தம்
  • பறாளை விநாயகர் பள்ளு
  • புதுவைப் பள்ளு
  • பொய்கைப் பள்ளு
  • மாந்தைப் பள்ளு
  • முக்கூடற் பள்ளு
  • முருகன் பள்ளு
  • வையாபுரிப் பள்ளு

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Flores, Jorge Manuel (2007). Re-exploring the Links: History and Constructed Histories Between Portugal and Sri Lanka. Otto Harrassowitz Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783447054904.
  2. Medieval Indian Literature: Surveys and selections. Sahitya Akademi. 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126003655.
  3. Pallu ilakiyam maruvasippu by Gnanasekran
தொகு பள்ளு இலக்கிய நூல்கள்
ஈழத்தின் பள்ளு இலக்கிய நூல்கள் பறாளை விநாயகர் பள்ளு | தண்டிகைக் கனக நாயன் பள்ளு | ஞானப் பள்ளு|கதிரை மலைப் பள்ளு
இந்தியப் பள்ளு இலக்கிய நூல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளு&oldid=4100611" இலிருந்து மீள்விக்கப்பட்டது