உள்நாட்டு வருவாய் துறை (நேபாளம்)
आन्तरिक राजस्व विभाग | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1960 (வரிவிதிப்புத் துறை) |
முன்னிருந்த அமைப்பு |
|
ஆட்சி எல்லை | நேபாளம் |
தலைமையகம் | இலாசிம்பட்டு, காட்மாண்டு, நேபாளம் |
அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | நிதித்துறை, நேபாள அரசு |
வலைத்தளம் | www.ird.gov.np |
நேபாளம் உள்நாட்டு வருவாய்த் துறை (Inland Revenue Department (Nepal)) என்பது காத்மாண்டுவிலுள்ள இலாசிம்பட்டில் அமைந்துள்ள நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நேபாள அரசாங்கத்தின் ஒரு துறையாகும். தற்போது வரிச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் பின்வரும் வரிகளின் நிர்வாகத்திற்கும் இத்துறை பொறுப்பாகும்: வருமான வரி, மதிப்பு கூட்டப்பட்ட வரி, கலால் வரி மற்றும் பொழுதுபோக்கு கட்டணம் (திரைப்பட மேம்பாட்டுக் கட்டணம்) போன்ற கடமைகள்.
நேபாள வருவாய்த் துறை பின்வரும் செயல்பாடுகளை செய்கிறது:
1. வரி நிர்வாகம்
2. வரிக் கொள்கை
3. வரி செலுத்துவோர் சேவைகள்
4. பதிவு, வருவாய் வசூல்
5. வரி தணிக்கை
6. வரி அமலாக்கம் மற்றும் விசாரணை
7. மதிப்பாய்வு & மேல்முறையீடு
8. வரி திருப்பி கொடுத்தல்
9. முன்கூட்டியே விதிப்பு
10. வரி ஒப்பந்தம் மற்றும் பன்னாட்டு வரிவிதிப்பு
11. கலால் மற்றும் மதுபான நிர்வாகம்
நேபாள உள்நாட்டு வருவாய் துறை காத்மாண்டுவில் மையமாக அமைந்துள்ளது. நேபாளம் முழுவதும் 1 பெரிய வரி செலுத்துவோர் அலுவலகம், 1 நடுத்தர அளவிலான வரி செலுத்துவோர் அலுவலகம், 43 உள்நாட்டு வருவாய் அலுவலகங்கள் மற்றும் 39 வரி செலுத்துவோர் சேவை அலுவலகங்கள் உட்பட 84 கள அலுவலகங்கள் இத்துறையின் கீழ் உள்ளன. [2] முன்னர் இருந்த வரித்துறை 1960 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உள்நாட்டு வருவாய் துறை மற்றும் இதன் மாவட்ட அலுவலகங்கள் முற்றிலும் செயல்பாட்டு வரிசையில் இயங்குகின்றன. வரி செலுத்துவோர் சேவையும், தணிக்கை மற்றும் சேகரிப்பும் முக்கிய செயல்பாடுகளில் அடங்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Inland Revenue Department Nepal". பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.
- ↑ "आन्तरिक राजस्व विभाग". ird.gov.np. பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.