உலுல்சாசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலுல்சாசைட்டு
Lulzacite
பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட உலுல்சாசைட்டு கனிமம்
பொதுவானாவை
வகைபாசுபேட்டு கனிமம்
வேதி வாய்பாடுSr2Fe2+(Fe2+,Mg)2Al4(PO4)4(OH)10
இனங்காணல்
நிறம்சாம்பல் பச்சை முதல் பசுமஞ்சள் வரை
படிக இயல்புவடிவமற்ற திரட்டுகள்; அரிதாக சிறிய நிறைவடிவ படிகங்கள்
படிக அமைப்புமுச்சாரிவச்சு
பிளப்புஇல்லை
மோவின் அளவுகோல் வலிமை5.5–6
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்–ஒளிகசியும்
ஒப்படர்த்தி3.55
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.654
nβ = 1.674
nγ = 1.684
இரட்டை ஒளிவிலகல்δ = 0.030
மேற்கோள்கள்[1][2][3]

உலுல்சாசைட்டு (Lulzacite) என்பது Sr2Fe2+(Fe2+,Mg)2Al4(PO4)4(OH)10.[1][2] என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இசுட்ரோன்சியம் தனிமத்தின் பாசுபேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது.

பிரான்சு நாட்டில் உள்ள குவார்ட்சைட்டு வைப்புகளிலில் (47°42′50″வடக்கு 1°29′20″மேற்கு) இந்த கனிமம் முதலில் 2000 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கனிமத்தை கண்டுபிடித்த பிரெஞ்சு புவியியலாளர் ஒய். உலுல்சாக்கு நினைவாக அவர் பெயர் கனிமத்திற்கு வைக்கப்பட்டது. இந்த வைப்புப் படிவுகளில் உலுல்சாசைட்டு கனிமம் குவார்ட்சு மற்றும் சிடரைட்டு கனிம இழைகளின் குவார்ட்சைட்டு-சுண்ணாம்பு பற்றிணைப்பாக காணப்படுகிறது. இவ்விழைகளில் அபாடைட்டு, கோயாசைட்டு மற்றும் பைரைட்டு ஆகிய கனிமங்களும் சேர்ந்திருக்கின்றன.[3]

P1 என்ற இடக்குழுவுடன் உலுல்சாசைட்டு முச்சரிவச்சுக் கனிமமாக படிகமாகிறது. (Pb2Zn(Fe2+,Zn)2Fe3+4(AsO4)4(OH)10).[3][4] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட இயேமிசைட்டு கனிமத்தின் படிக அமைப்பை ஒத்த வடிவமைப்பையே உலுல்சாசைட்டும் ஏற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Lulzacite Mineral Data". webmineral.com. David Barthelmy. பார்க்கப்பட்ட நாள் September 4, 2010.
  2. 2.0 2.1 "Lulzacite". mindat.org. Jolyon Ralph and Ida Chau. பார்க்கப்பட்ட நாள் September 4, 2010.
  3. 3.0 3.1 3.2 Yves Moëlo; Bernard Lasnier; Pierre Palvadeau; Philippe Léone; François Fontan (15 March 2000). "Lulzacite, Sr2Fe2+(Fe2+,Mg)2Al4(PO4)4(OH)10, a new strontium phosphate (Saint-Aubin-des-Châteaux, Loire-Atlantique, France).". Comptes Rendus de l'Académie des Sciences, Série IIA 330 (5): 317–324. doi:10.1016/S1251-8050(00)00152-X. Bibcode: 2000CRASE.330..317M. 
  4. "Jamesite". mindat.org. Jolyon Ralph and Ida Chau. பார்க்கப்பட்ட நாள் September 4, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலுல்சாசைட்டு&oldid=3876129" இலிருந்து மீள்விக்கப்பட்டது